கென்னடி வழங்கிய 'சலுகையை' நேரு மறுத்தது ஏன்..?

|

முன்னாள் வெளியுறவு மந்திரியான மஹராஜ்கிருஷ்ணா ராஷ்கோட்ரா (Maharajkrishna Rasgotra) எழுதிய - 'ராஜதந்திரத்தின் வாழ்க்கை' ( A Life in Diplomacy) என்ற புத்தகம் எதிர்பார்ப்பை மீறிய அளவில் பரவியுள்ளது. ஏனெனில், 1949-ஆம் ஆண்டு இந்திய வெளியுறவு சேவையில் (IFS) இணைந்த மஹராஜ்கிருஷ்ணா ராஷ்கோட்ரா, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்றவர்களின் அரசியல் சாதூர்யத்தை மட்டுமின்றி ஜவகர்லால் நேருவின் ஆட்சிகாலங்களில் நிகழ்ந்த இந்திய இராஜதந்திரங்களையும் அறிந்தவர்.

அப்படியாக, தனது புதிய புத்தகத்தில் ஜவகர்லால் நேரு மீதான ராஷ் கோட்ராவின் கண்ணோட்டம் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது.

பதவி :

பதவி :

இரண்டு குறிப்பிட்ட கேள்விகளுக்கு பதில் தேவைப்படுகிறது. ஒன்று - கம்யூனிஸ்ட் சீனா பதவி வகிக்க கூடாது என்பதற்காக 1950-ல் வாஷிங்டன் அரசு இந்தியாவிற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் பதவி வழங்கியதா..? அதாவது நேரு மறுத்த பதவி..!

ஜான் எஃப் கென்னடி :

ஜான் எஃப் கென்னடி :

இரண்டு - 1961-ல் அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி இந்தியாவிற்கு அணு ஆயுத தொழில்நுட்பத்தை வழங்கியதா..?

அணு சக்தி :

அணு சக்தி :

அதாவது சீனா 1964-ல் அதன் முதல் அணு ஆயுத வெடிப்பை நிகழ்த்துவதற்கு முன்பு இந்தியா அணு சக்தி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு வழங்கப்பட்டு மீண்டும் நேருவினால் மறுக்கப்பட்டதா..?

சீன- இந்திய உறவுகள் :

சீன- இந்திய உறவுகள் :

லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்-ன் சர்வதேச வரலாற்றுத் துறையின் இளநிலை மாணவரான அன்டன் ஹார்டர், 1949 மற்றும் 1962 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சீன - இந்திய உறவுகள் என்ற அவரின் ஆய்வறிக்கையில் இருந்து முதல் கேள்விக்கான விடை கிடைத்தது.

 சலுகை :

சலுகை :

அதாவது ஐ.நா.பாதுகாப்பு சபையில் சீனாவின் இருக்கையில் இந்தியாவை அமர வைக்க நிகழ்த்தப்பட்ட சலுகையை நேரு மிக உறுதியுடன் நிராகரித்து விட்டார் என்கிறது அவரின் ஆய்வறிக்கை.

இரண்டாவது கேள்வி :

இரண்டாவது கேள்வி :

இரண்டாவது கேள்விக்கான பதிலை தனது புத்தகத்திலேயே எழுதுகிறார் முன்னாள் வெளியுறவு மந்திரியான மஹராஜ்கிருஷ்ணா ராஷ்கோட்ரா.

அமெரிக்க உளவுத்துறை :

அமெரிக்க உளவுத்துறை :

சீனாவின் அணுசக்தி ஆயுத திட்டங்கள் 1963-ல் வெடிப்பு சோதனைகளுடன் நிகழும் என்று அமெரிக்க உளவுத்துறை கண்டறிந்தது. அதனை தொடர்ந்து அமெரிக்கா ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி இந்தியாயை நோக்கி ஒரு அசாதாரண 'சைகையை' செய்கிறார்.

சீனாவிற்கு முன்பு :

சீனாவிற்கு முன்பு :

இந்தியாவின் ஜனநாயகம் ஆர்வலராகவும் மிகவும் உயர்வான தலைவராகவும் திகழ்ந்த ஜவகர்லால் நேருவிடம் கம்யூனிச சீனாவிற்கு முன்பு ஒரு அணு சோதனை நடத்தும் முதல் ஆசிய நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்று கென்னடி கருதியுள்ளார்.

தொழில்நுட்ப குறிப்பு :

தொழில்நுட்ப குறிப்பு :

அதனை தொடர்ந்து நேருவிற்கு தன் கைப்பட ஒரு கடிதம் எழுதியுள்ளார் கென்னடி, அதில் அமெரிக்க அணு சக்தி கமிஷன் தலைவரின் ஒரு தொழில்நுட்ப குறிப்பும் உள்ளடக்கம்.

அமெரிக்க அணு ஆயுத வெடிப்பு :

அமெரிக்க அணு ஆயுத வெடிப்பு :

அதாவது ராஜஸ்தான் பாலைவனத்தில் ஒரு அமெரிக்க அணு ஆயுத வெடிப்பு சோதனையை இந்திய அணு விஞ்ஞானிகள் நிகழ்த்துவதற்கான ஒரு சலுகை.

சிறிதும் கையாளவில்லை :

சிறிதும் கையாளவில்லை :

இந்திய அணுசக்தியின் தந்தையான ஹோமி ஜெ பாபா உடனடியாக அந்த சலுகையை ஏற்றுக் கொண்டார் என்றும், நேரு அந்த விடயத்தை சிறிதும் கையாளவில்லை என்கிறது ஜி.பி. பார்த்தசாரதியின் மகனும் இந்திரா காந்தியின் முன்னாள் அறிவியல் ஆலோசகருமான அசோக் அளித்த தகவல்கள்.

கென்னடி அனுப்பிய கடிதம் :

கென்னடி அனுப்பிய கடிதம் :

மறுபக்கம் கேள்விகளுக்கு பதில் அளிக்க வல்ல ஆதாரமாய் இருக்கும் கென்னடி அனுப்பிய கடிதம் இப்போது கிடையாது, தொலைக்கப்பட்டு விட்டது என்று கூறப்படுகிறது.

நல்ல எண்ணம் :

நல்ல எண்ணம் :

நேரு ஒரு பெரிய திறன்மிக்க தொலைநோக்கு பார்வை மற்றும் தேசப்பற்று கொண்டவராய் இருந்தார். ஆனால், அவர் உருவாக்கிய முடிவான அழிவு நிலை மற்றும் உருவாக பாதையானது நல்ல எண்ணம் கொண்டே உருவாக்கப்பட்டவைகள் என்ற ஆதரவு குரலும் எழுந்துள்ளன.

வளர்ச்சி :

வளர்ச்சி :

ஆகையால் நேரு சார்ந்த இந்த ஆய்வில் மேலும் பல பரந்த விவாதம் தேவை, ஏனெனில் இந்தியாவின் அணு சக்தி வளர்ச்சி அப்படியானது..!

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

இந்திரா காந்தி, கலாமுக்கு இரகசியமாக நிதி ஒதுக்கியது ஏனென்று தெரியுமா..?


சாத்தியமே இல்லாத 'ஏலியன் வாகனம்' - ஹிட்லர் சாதித்தது எப்படி..?!


தோல்வியில் முடிந்த அப்துல் கலாமின் ஒரே முயற்சி..!

தமிழ் கிஸ்பாட்  :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

Read more about:
English summary
Did Nehru refuse Kennedy’s nuclear weapons technology offer? Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X