பண்டைய நாகரீகத்தினர் காலப்பயணம் மேற்கொண்டார்களா??

Written By:

காலப்பயணம் உலகின் தீர்க்க முடியாத குழப்பங்களில் ஒன்றாகும். இதனை சாத்தியமாக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் மிக தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். காலப்பயணம் உண்மையில் சாத்தியம் தானா என்பதே கேள்வி குறியாக இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நமக்கு முன் பூமியில் வாழ்ந்தவர்கள் அல்லது பண்டைய நாகரீகத்தினர் காலப்பயணம் மேற்கொண்டிருக்கலாம் என வரலாற்று ஆவனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது காலப்பயணம் குறித்து புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

01

ரோமன் மற்றும் தெசியஸ் இடையே பிரச்சனை நிலவிய காலக்கட்டத்தில் ஏழு பேர் சிறிய குகையில் உறங்க சென்றனர். பின் அவர்கள் தூக்கத்தில் இருந்து விழித்த போது எபேசஸ் என்ற நகரத்தில் உணவு வாங்க உலவினர்.

02

ஒரு இரவு மட்டும் உறங்கவில்லை, மாறாக சுமார் இருநூறு ஆண்டுகள் உறக்கத்தில் இருந்ததை அறிந்தனர். இக்காலத்தில் ரோம சாம்ராஜ்ஜியம் முழுக்க கிறிஸ்துவம் பரவி இருப்பதை அறிந்து கொண்டனர்.

03

தியொடோசியசு II பேரரசர் இந்நிகழ்வை அறிந்ததும், இதனை உயிர்த்தெழுதலுக்கான ஆதாரமாக கருதினார். பின்னாளில் உறங்கியவர்கள் இயற்கை முறையில் மரணித்தனர், பின் அவர்கள் உறங்கிய குகைகளிலேயே அவர்கள் அடக்கம் செய்யப்பட்டு விட்டனர்.

04

இந்த ஏழு பேர் உறங்கிய குகை இன்றைய துருக்கியின் மலைப்பகுதியில் அமைந்துள்ளது. சுமார் 100 ஆண்டுகளாக மக்கள் இந்த எழவர் அடக்கம் செய்யப்பட்ட இடங்களுக்கு அருகாமையிலேயே அடக்கம் செய்வதை விரும்பினர்.

05

மேலும் கிறிஸ்துவ நம்பிக்கைகளின் படி செயின்ட் மேரி மேக்டெலின் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கருதுகின்றனர். இதோடு இப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்ட ஏழு பேர் புனிதமிக்கவர்களாக பார்க்கப்படுகின்றனர்.

06

இந்த ஏழு பேர் எப்படி 200 ஆண்டுகளை கடந்து சென்றனர் என்பது இன்று வரை மர்மமாகவே இருக்கின்றது. இவர்கள் உண்மையில் காலப்பயணம் தான் மேற்கொண்டுள்ளனர் என்றும் நம்பப்படுகின்றது.

07

கிறிஸ்துவ மதத்தின் புனித நூலான பைபிளிலும் காலப்பயணம் குறித்த எடுத்துக்காட்டுகள் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பிட்ட ஒரு கதையில் ஜெரிமியா மறைந்து போவது டை் டிராவல் சார்ந்த சந்தேகங்களை எழுப்பும் வகையில் இருக்கின்றது.

08

அதன் படி பைபளில் வரும் ஜெர்மியா என்பவர் தனது மகன் யுனுசிடம் அக்ரிப்பா தோட்டத்தில் இருந்து அத்திப்பழவம் எடுத்து வர அனுப்பினார். யுனுச் பயணிக்கும் போது தோட்டத்தில் உறங்கி சுமார் 66 ஆண்டுகளுக்கு பின் விழித்ததாகவும், இவர் இத்தனை ஆண்டுகள் கடந்து வந்திருப்பதை பெரியவர் ஒருவர் தெரிவித்ததாக டாக்டர்.ரேமண்ட் சர்பர்க் குறிப்பிட்டுள்ளார்.

09

நம்மில் பலருக்கும் அதிகம் அறிமுகமான மாகபாரதத்திலும் காலப்பயணம் சார்ந்த கதை இருக்கின்றது. இதில் ரேவதா என்ற ராஜா சொர்கத்திற்கு சென்று பிரம்மாவை சந்தித்து பல ஆண்டுகளுக்கு பின் பூமிக்கு வந்ததாக கூறப்பட்டுள்ளது.

10

காலப்பயணத்தை குறிக்கும் மிகவும் பழைமை வாய்ந்த குறிப்பாக மகாபாரத கதையினை பல்வேறு ஆய்வாளர்களும் குறிப்பிடுகின்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Did Ancient Civilizations Possess Knowledge Of Time Travel Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்