நியாண்டர்தால்களின் சிக்கலான நிலத்தடி கட்டமைப்புகள், என்னவாக இருக்கும்..?!

Written By:

நியாண்டர்தால் (Neanderthal) மனித இனம், மனித இனத்தின் கொள்ளுத் தாத்தாக்கள். சுமார் 3,50,000 ஆண்டுகளுக்கு முன்பே முன்-நியாண்டர்தால் இனம் ஐரோப்பாவில் காணப்பட்டு, முழுமையான நியண்டர்தால் குணங்கள் 1,30,000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகி வாழ்ந்து, சுமார் 24, 000 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் இவ்வினம் அழிந்துபோனது.!

அப்படியான, ஆதிகால மனிதர்கள் பெரிதாக என்ன செய்து இருக்க போகிறார்கள்..? உடை, வேட்டை உணவு, நெருப்பு இவ்வளவுதான் அவர்கள் அதிகபட்ச அறிவு, கண்டுபிடிப்புகள் என்று நமது பரிணாம உறவினர்கள் திறன்களை நாம் குறைத்து மதிப்பிட்டுள்ளோம் என்பதற்கான மற்றொரு சான்று தான் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

பிரான்சில் உள்ள ஒரு குகையில் நிகழ்த்தப்பட்ட ஆய்வில், மர்மமான கற்களால் உருவான மோதிர வடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, மேலும் இவைகள் நியாண்டர்தால் மூலம் கட்டப்பட்டது என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

#2

குகைகளுக்குள் இருந்து கிடைக்கப்பெற்ற நூற்றுக்கணக்கான கனிம வைப்பு மற்றும் கசிதுளிப்படிவுகள் மூலம் அந்த மர்மனான வடிவமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

#3

மோதிர வடிவ கல் அமைப்பை நன்கு ஆராய்ந்த பின்பு அது நேரம் காலம் சார்ந்த டேட்டிங் நுட்பமாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

#4

அப்படியானால், சுமார் 175000 ஆண்டுகளுக்கு முன்பே நியாண்டர்தால் இனத்தால் நேரம் காலம் என்ற அறிவு பிறந்து, வகுத்து அமைக்கப்பட்டுள்ளது என்பது நிதர்சனம்.

#5

ஒரே அளவிலான உயரம் இருக்கும்படியாக நறுக்கப்பட்டுள்ள கசிதுளிப்படிவுகள், இரண்டு ஓவல் வடிவங்களில் 40 சென்டிமீட்டர் உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

#6

குகை வாசலில் இருந்து சுமார் 336 மீட்டர் நீளம் கொண்டுள்ள இந்த குகை வடிவமைப்பானது, வருங்கால மனித நவீனத்துவத்திற்க்கு நிலத்தடி ஆதாரங்கள் முக்கியாகும் என்பதை நியாண்டர்தால் அறிந்து வைத்துள்ளன என்பதையும் உறுதி செய்கிறது.

#7

உடன் இந்த கட்டமைப்புகள் மறுக்கமுடியாத வண்ணம் முழுக்க முழுக்க மனிதனால் உருவாக்கப்பட்டவை தான், இல்லையெனில் இப்படி ஒரு வடிவமைப்பு உருவாகி இருக்கவே முடியாது என்பதையும் ஆராய்ச்சியாளார்கள் ஆணித்தனமாக கூறியுள்ளனர்.

#8

கிட்டத்தட்ட 175,000 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் வாழ்ந்த - அறியப்பட்ட ஒரே மனித இனமான நியாண்டர்தால் இனத்தின் இந்த ஆழ்குகை வடிவமைப்பு, நெருப்பு வெளிச்சத்தின் கீழ்தான் உருவாகி இருக்க முடியும்.

#9

கண்டுபிடிக்கப்பட்ட கட்டமைப்பு உண்மையாக எதற்காக வடிவமைக்கப்பட்டது, அதன் அர்த்தம் என்ன என்பதை மேலும் அறிந்து கொள்ள இந்த வடிவமைப்பின் 3டி உருவம் விரிவாக ஆராயப்பட்டு வருகிறது..!

#11

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Dating techniques showed that they were broken off 175,000 years ago.Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்