சாதித்தது சீனா, மிரட்சியில் சூப்பர் பவர் நாடுகள்..!

Written By:

இஸ்ரோ, நாசா போன்ற சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையங்களுடன் ஒப்பிடுகையில் எப்படி பார்த்தாலும் சீனா சற்று பின்தங்கிய நிலையில் தான் இருக்கும். 2020-ல் தான் சீனா தன் விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது, உடன் சேர்த்து நிலவின் சுற்றுபாதை, நிலவில் மனிதர்களை தரையிறக்குதல், நிலவில் காலனி அமைத்தல் என பல திட்டங்களை இப்போது தான் சீனா மேற்கொள்ள முனைகிறது.

ஆனால், சொல்லாமல் கொள்ளாமல் சீனா செய்த அதிரடி ஒன்று சூப்பர் பவர் நாடுகள், ஸ்பேஸ்வார் எனப்படும் விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சி யுத்தம் தொடங்கி எதிரி நாடுகள் வரையிலாக மிரண்டு போய் கிடக்கிறது, அப்படி என்ன சாதனை செய்தது சீனா..?

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

வெற்றி :

சீனா, உலகின் முதல் குவாண்டம் செயற்கைக்கோளை (செவ்வாய்க்கிழமை அன்று) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

தொடர்பு :

சீனாவின் இந்த செயற்கைகோள் தான் உலகின் முதல் ஹேக் ப்ரூப் வசதி கொண்ட செயற்கைகோள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது விண்வெளி மற்றும் தரையின் இடையே நிகழும் தொடர்புகளை ஹேக் செய்ய இயலாது.

பாதுகாப்பு :

இதனை ஒட்டுக் கேட்டல் மற்றும் இடைமறித்தல் போன்றவைகளை நிகழ்த்த முடியாத வண்ணம் பாதுகாப்பு அம்சங்கள் பெற்றது.

லான்ச் :

இந்த செயற்கைக்கோள் முற்பகல் 1:40 மணிக்கு வடமேற்கு கோபி பாலைவனத்தின் ஜிகுவான் லான்ச் மையத்தில் இருந்து தொடங்கப்பட்டது இந்த தகவலை சீனாவின் சின்குவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது

கோளப்பாதை :

600-க்கும் மேற்பட்ட கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் 500 கி.மீ. உயரத்தில் சூரிய-சின்க்ரோனஸ் கோளப்பாதை நுழைந்து ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் ஒருமுறை பூமி வட்டமிடும்.

குவாண்டம் பின்னலை :

இதன் இரண்டு ஆண்டு கால பணியில் விண்வெளி அளவுகோலில் குவாண்டம் பின்னலை (Quantum Experiments at Space Scale - QUESS) சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளும்.

குவாண்டம் இயற்பியல் :

"ஹேக் -ப்ரூப் " கொண்ட இந்த செயற்கைகோள் குவாண்டம் தொடர்பு நிறுவ மற்றும் குவாண்டம் இயற்பியல் சார்ந்த விசித்திரமான நிகழ்வு பற்றிய ஒரு நுண்ணறிவை வழங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

சாதனை :

சீனாவின் இந்த சாதனை ஏவுதல், ஹேக் ப்ரூப் செயற்கைகோள், குவாண்டம் இயற்பியல் ஆய்வு என அனைத்துமே உலக நாடுகளை சீனாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
China launches world's 1st hack-proof communications satellite. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்