உலகின் மிகப்பெரிய 'அன்னிய வேட்டை'யில் களமிறங்கிய சீனா..!

Written By:

'ஸ்பேஸ் ரேஸ்' (Space Race) எனப்படும் விண்வளி வளர்ச்சி யுத்தமானது தேசிய பாதுகாப்பு தொடங்கி தொழில்நுட்ப மற்றும் கருத்தியல் மேன்மையை நிலைநாட்டல், ராக்கெட் அறிவியல், விண்வெளி ஆராய்ச்சிகளில் மைல்கள் போன்றவைகளுடன் சேர்த்து ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரகவாசிகளை யார் முதலில் கண்டுபிடிப்பது என்பது வரை வந்து நிற்கிறது..!

முதலில் யார் நிலவை அடைவோம் என்ற பனிப்போர் காலப்போட்டிக்கு சற்றும் குறையாத ஈடுப்பாட்டில், வேகத்தில் நடக்கிறது ஏலியன்களை யார் முதலில் கண்டிபிடிக்கிறார்கள் என்ற போட்டியும். அந்த போட்டியில் சீனா ஒரு மாபெரும் அடியை எடுத்து வைத்துள்ளது..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஒற்றை டிஷ் :

உலகின் மிகப்பெரிய ஒற்றை டிஷ் ரேடியோ தொலைநோக்கியின் கடைசி பகுதியை கட்டமைத்ததின் மூலம் சீனா உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை பயன்படுத்த தயாராக உள்ளது.

பிரதிபலிப்பான் :

சீனாவின் தென் மேற்கு மாகாணத்தில் உள்ள கிஷோவ்வின் (Guizhou) மலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த தொலைநோக்கியின் பிரதிபலிப்பான் மட்டுமே 30 கால்பந்து மைதானங்களின் அளவில் நீண்டுள்ளது.

நுண்துளை கோள தொலைநோக்கி :

பாஸ்ட் என்ற பெயர் கொண்ட இந்த 500 மீட்டர் நுண்துளை கோள தொலைநோக்கியானது பிரபஞ்சத்தில் உள்ள மிகவும் மர்மமான பொருள்கள் சிலவற்றை ஆராய பயன்படுத்தப்பட இருக்கிறது.

ஏலியன் வாழ்க்கை :

சீனாவின் அரசாங்க ஒளிபரப்பான சிசிடிவி-யின்படி இந்த தொலைநோக்கியானது இது கருந்துளைகள், பல்சர்கள் மற்றும் விண்வெளியில் உள்ள ஏலியன் வாழ்க்கை போன்ற ஆய்வுகளை நிகழ்த்த இருக்கிறது.

ரேடியோ அலைகள் :

185 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் உருவாகியுள்ள இந்த தொலைநோக்கி யானது இதுவரை இல்லாத அளவிலான விரிவான ரேடியோ அலைகள் கண்டறியும்.

ஹைட்ரஜன் வாயு வலை :

இதன் மூலம் பிரபஞ்சத்தில் விண்மீன் திரள்கள் உருவாகுவதற்கு முன்பு இருந்த ஹைட்ரஜன் வாயு வலை பற்றிய ஆய்வை நிகழ்த்த முடியும்.

இயற்கை :

மின்காந்த ஊடுருவல் மற்றும் சக்திவாய்ந்த ரிசீவரை பெறுதல் ஆகியவைகளை அனுமதிக்கும் ஒரு இயற்கையான சூழலில் தொலைநோக்கியானது கட்டமைக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட கட்டமைப்பு :

இதன் மூலம் வேற்று கிரக வேட்டை நடத்தப்படும் என்ற அதிகாரப்பூர்வ வார்த்தையை யாருமே வெளியிடவில்லை என்பது ஒருபக்கம் இருக்க இதன் பிரம்மாண்ட கட்டமைப்பானது ஏலியன் தேடலை உறுதி செய்கிறது.

சாதனை :

உலகின் மாபெரும் தொலைநோக்கியை உருவாக்கிய சாதனைக்கு முன்பு கடந்த மாதம் உலகின் முதல் 93-பெட்டாப்ளாப்-பீட்டாப்ளாப் கணினியை சீனா வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

2030 :

மேலும் 2030-களில் நிலவிற்கு மனிதனை அனுப்புதல் மற்றும் சொந்த விண்வெளி நிலையத்தை கட்டுதல் போன்ற திட்டங்களையும் சீனா அறிவித்துள்ளது.

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
China just unveiled the biggest alien-hunting telescope in the world . Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்