ஸ்மார்ட்போன் மூலம் பார்க்கிங் செய்யும் வசதி அறிமுகம்.!!

Written By:

வாகனங்களுக்கு உதிரி பாகங்களை தயாரிக்கும் நிறுவனமான போஷ் ஆளில்லாமல் தானியங்கி முறையில் இயங்கும் புதிய வகை தொழில்நுட்ப அமைப்பினை அறிமுகம் செய்துள்ளது. ஹோம் சோன் பார்க் அசிஸ்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்த அமைப்பு 2019 ஆம் ஆண்டு வட அமெரிக்காவில் தயாரிக்கப்படும் அனைத்து கார்களிலும் இடம் பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

01

தற்சமயம் பயன்பாட்டில் இருக்கும் டெஸ்லாவின் ருடிமென்டரி ஆட்டோ-பார்க் அமைப்புகள் போன்று இல்லாமல் போஷ் புதிய வகை அம்சமானது சுமார் 100 மீட்டர் வரையி கடினமான பார்க்கிங் தந்திரங்களை எதிர்கொள்ளும் திறன் வாய்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

02

ஹோம் சோன் அமைப்பினை பயன்படுத்த ஓட்டுனர் முதலில் துவங்கும் இடத்தினை ஸ்மார்ட்போனில் செட் செய்து ஒரு முறை மட்டும் வாகனத்தை பார்க் செய்ய வேண்டும்.

03

ஒரு முறை பார்க் செய்த வழி தடங்களை பதிவு செய்து அதன் பின் ஸ்மார்ட்போன் மூலம் மிகவும் எளிமையாக காரினை பார்க் செய்திட முடியும்.

04

ஹோம் சோன் பதிவு செய்த வழி தடங்களை அப்படியே பின்பற்றாமல் பம்ப்பர், கண்ணாடி போன்ற இடங்களில் பொருத்தப்பட்டுள்ள 12 அல்ட்ராசோனிக் சென்சார்களை பயன்படுத்தி எவ்வித தடங்களும் இன்றி பார்க் செய்யும்.

05

கேமரா இல்லாமல், ஹோம் சோன் வாகனத்தின் நான்கு முனைகளிலும் பொருத்தப்பட்டுள்ள ரேடார் சென்சார்களை பயன்படுத்துகின்றது.

06

பதிவு செய்யப்பட்ட வழி தடங்கள் மற்றும் சென்சார்கள் சேகரித்த தகவல்களை கொண்டு வழியில் இருக்கும் தடங்களை தவிர்க்கும் திறன் ஹோம் சோன் கொண்டுள்ளது.

07

ஒரு வேலை தவிர்க்க முடியாத இடர்பாடுகள் இருக்கும் பட்சத்தில் வாகனத்தை ஒரே இடத்தில் அப்படியே நிறுத்தி ஓட்டுனருக்கு எச்சரிக்கை செய்யும். இதனால் வாகன சேதத்தை நிறுத்த முடியும்.

08

மேலும் ஓட்டுனர் நிச்சயம் நிறுத்தும் இடத்தை செட் செய்ய வேண்டிய அவசியமும் கிடையாது. ஹோம் சோன் தனது பாதையை திட்டமிடம் போது அதிகபட்சம் 6.5 அடி வரை விலகி நிறுத்த முடியும்.

09

போஷ் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் புதிய பார்க்கிங் அம்சம் ஓட்டுனர்களை சிரமமின்றி வாகனத்தை நிறுத்த வழி செய்வதோடு பலரையும் ஈர்க்கும் என்றே கூறலாம்.

10

போஷ் ஹோம் சோன் அம்சம் எவ்வாறு இயங்குகின்றது என்பதை விளக்கும் வீடியோ ஸ்லைடரின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Bosch introduced driverless parking system Using Smartphone Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்