'இந்த விஷயத்துல' இந்தியா கூட 'முடிஞ்சா' மோதி பாருங்க..!

Written By:

இந்திய தேசம், யாரும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத சாதனைகளையும், செயல்களையும் நடத்திக் காட்டிக் கொண்டே இருக்கும் மக்களை கொண்ட நாடு இந்தியாவை - இப்படியான வார்த்தைகளால் தான் நமது இந்தியாவையும், அதன் வளர்ச்சியையும் வரையறுக்க முடியும்..!

உலக நாடுகளுக்கு மத்தியில் இன்று வரையிலாக வளரும் நாடாக நாம் திகழ்ந்தாலும் கூட, மிகவும் வளர்ச்சியடைந்த சூப்பர் பவர் நாடுகளால் கூட அசைத்து பார்க்க முடியாத வல்லமைகளை இந்தியா கொண்டுள்ளது என்பது தான் நிதர்சனம். அப்படியாக, இந்தியர்கள் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய, பெருமைப்பட வேண்டிய பிற நாடுகள் நெருங்க முடியாத 'இந்திய வலிமை'களை பற்றிய தொகுப்பே இது.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

#1

பழம்பெருமையான அதி உயர மலை போர் நிபுணத்துவம்..!

#2

அணு ஆயுதங்கள் கொண்ட சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளிடம் எல்லை பகிர்வு கொண்டுள்ள இந்தியாவிற்கு மலை போர்ப் பயிற்சி மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகிறது.

#3

ஆகையால், இந்தியா அதி உயர மலை போர் பயிற்சிகளில் யாரைவிடவும் அதிக அளவில் ஈடுபட்டு இப்போது உலகின் முதன்மையானதொரு இடத்தில் உள்ளது.

#4

காஷ்மீரின் குல்மர்க்கில் உள்ள அதி உயர போர் பயிற்சி பள்ளியில் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜெர்மனி நாட்டு ராணுவ வீரர்களுக்கு கூட பயிற்சி வழங்கப்படுமளவு முதன்மை வகிக்கிறது இந்திய தேசம்..!

#5

குறிப்பாக சியாச்சின் பகுதியில் இந்திய ராணுவம் கொண்ட வெற்றியானது காலம் முழுக்க இந்திய ராணுவத்தின் கம்பீரத்தையும் அதன் அதி உயர போர் திறனின் பிரமாண்டத்தையும் பறைசாற்றிக் கொண்டே இருக்கும்.!

#6

சர்ச்சைகளே இல்லாத ரிமோட் சென்சிங் திறன்..!

#7

சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலாக இந்தியா, செயற்கைக்கோள் தரவு சார்ந்த விடயத்தில் அமெரிக்கவை பெரிதும் நம்பி இருந்தது. அதனால் ஏற்பட்ட மிகவும் தாமதமான எச்சரிக்கைகள் இந்திய மக்களின் உயிரை பெரிய அளவில் பலி வாங்கியது (எடுத்துக்காட்டுக்கு - 20,000 பேரை பலி வாங்கிய1999 ஒடிசா சூறாவளி)

#8

ஆனால், இன்று அமெரிக்காவை விட மிகவும் சக்தி வாய்ந்த ரிமோட் சென்சிங் திறன் இந்தியாவிடம் உள்ளது. உடன் பல்வேறு பயன்பாட்டிற்காக பல செயற்கைகோள்கள் இந்தியாவிற்காக விண்வெளியில் செயலபட்டுக் கொண்டிருக்கின்றன.

#9

நிலத்தடி நீர் ஆதராம் சார்ந்த மேப்பிங், பயிர் சாகுபடி பரப்பளவு மற்றும் உற்பத்தி மதிப்பு, பச்சையம் மற்றும் கடல் பரப்பு வெப்பநிலை, பல்லுயிர் பாத்திரப்படைப்பு, நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டம், இயற்கை வளம் சார்ந்த தரவு, அடிப்படை முறையிலான சாத்தியமான மீன்பிடி மண்டலம் என பல வகையான பயன்பாட்டிற்காக செயற்கைகோள்களை இந்தியா கொண்டுள்ளது..!

#10

தோரியம் பயன்படுத்தி மிகவும் அறிவார்ந்த அணுசக்தி திட்டம்..!

#11

உலகம் முழுவதும் உள்ள நாடுகள், யுரேனியத்திற்கு பதிலாக வேறொரு அணுசக்தி எரிபொருளை உருவாக்க சிரமப்பட்டது போது, இந்தியா தோரியம் மிகுந்த தேசமாக திகழ்ந்தது.

#12

தோரியம் வைப்பில் இயற்கையாகவே இந்தியா மிகவும் செழிப்பான நாடு என்பது ஒருபக்கம் இருக்க, நமது விஞ்ஞானிகள் தோரியத்திற்கு பதிலாக யுரேனியத்தை (யுரேனியம் 238) அணுசக்தி எரிபொருளாக்கி உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தினர்.

#13

செவ்வாய் கிரகத்தை அடைந்த முதல் ஆசிய நாடு மற்றும் உலகின் நான்காம் நாடு..!

#14

இந்தியா விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் மங்கல்யான் பற்றிய அறிமுகம் யாருக்குமே தேவைப்படாது, அந்த அளவிலான வெற்றியை பெற்றோம், விண்வெளி வளர்ச்சியில் இந்தியாவின் கை ஓங்கியது என்றே கூறலாம் .!

#15

செவ்வாய் கிரக சுற்றுவட்ட பாதையை அடைந்த முதல் ஆசிய நாடு மற்றும் உலகின் நான்காவது நாடு என்ற புகழைப் பெற்றது இந்தியா..!

#16

யாரைவிடவும் மிகவும் குறைந்த செலவில் அதாவது சுமார் 450 கோடி செலவில், செவ்வாய் சுற்றுப்பாதையை இந்தியா அடைந்தது மேலும் ஒரு பெருமையாகும்..!

#17

உலகில் நடமாடும் மிகப்பெரிய ராணுவத்தில் மூன்றாவது இடம் - இந்திய ராணுவத்திற்கு..!

#18

அதிநவீன ஆயுதங்கள் கொண்ட 1129900 செயல் துருப்புக்கள் மற்றும் 960000 இருப்பு துருப்புக்கள் என இந்த கிரகத்தில் நடமாடும் மாபெரும் ராணுவங்களில் இந்திய இராணுவமும் ஒன்று.

#19

பெரிய அளவிலான இன்டர்நெட் பயன்பாடு கொண்ட நாடு..!

#20

சீனாவிற்கு அடுத்தபடியாக அதிக இன்டர்நெட் பயனர்களை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. நவம்பர் 30 , 2015 வரையிலாக நிகழ்த்தப்பட்ட ஆய்வின்படி இந்தியாவில் 1,251,695,584 இன்டர்நெட் பயனர்கள் உள்ளன.

#21

அமெரிக்கா, பிரேசில், ஜப்பான், ரஷ்யா ஆகிய நாடுகள் இந்தியாவிற்கு அடுத்தடுத்த இடங்களில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

#22

அணு சொத்துக்கள் ( ஆயுதங்கள் மற்றும் உலைகள் )..!

#23

சுதந்திரம் பெற்றதில் இருந்து இன்று வரையிலாக என மிகவும் குறுகிய காலத்தில், இந்தியாவின் அணுசக்தித் திறன் வியக்கத்தக்க வகையில் வளர்ந்துள்ளன..!

#24

தோரியம் சார்ந்த வீரிய ஈனுலைகள் தொடர்பான வளர்ச்சியில் இந்தியா முதல் இடம் வகிக்கிறது.

#25

சுமார் 5780 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 7 அணுசக்தி நிலையங்கள், 21 அணு உலைகள் கொண்டுள்ளோம். மேலும் உலைகள் கட்டமைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

#26

அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பின் அறிக்கையின் படி, இந்தியாவில் சுமார் 75 முதல் 110 வரையிலாக அணு ஆயுதங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது

#27

அச்சமில்லாத உலகின் மிகப்பெரிய விமான படைகளில் ஒன்று..!

#28

அதிநவீனத்துவம் நிறைந்த சுமார் 1820 விமானங்கள், 905 போர் விமானங்கள், 595 பைட்டர்ஸ் மற்றும் 310 அட்டாக் ஜெட்ஸ் என இந்திய விமானப்படை உலகின் நான்காவது பெரிய விமானப்படையாக திகழ்கிறது.

#29

ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் பிற வளர்ந்த ஐரோப்பிய நாடுகளுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

#30

பெரிய அளவிலான தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சி..!

#31

இந்திய தகவல் தொழில்நுட்ப துறை ஒரு அரக்கத்தனமான வளர்ச்சி நிலையை கொண்டது என்பது உலகம் முழுக்க ஏற்றுக் கொலைப்படும் ஒரு கருத்தாகும்..!

#32

தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியா அடுத்த ஐந்து ஆண்டுகளில் சீனாவை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்..!

#33

மனித இனம் தெரிந்துக்கொள்ள விரும்பாத 'கொடூரமான' சோதனைகள்..!


காட்டுத்தனமான ஐடியாக்களை கொண்டு களம் இறங்கும் நாசா..!


உலக நாடுகளை 'தெறிக்கவிட்ட' இந்தியா...!

#34

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Areas In Which India Beats Even The Most Powerful Countries In The World. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்