மாயன் காலத்து வானியலாளர் குறிப்பு, என்ன சொல்கிறது..?!

Written By:

கொலம்பசுக்கு முந்தைய காலத்தில் அமெரிக்காவின் முழு வளர்ச்சிபெற்ற எழுத்து மொழி கொண்ட ஒரே நாகரீகம் மாயன் நாகரீகம் தான். கி.மு. 2600-ல் தோன்றிய மாயன் நாகரிகம் கணிதம், எழுத்துமுறை, வானியல் போன்ற துறைகளில் மேம்பட்டவர்களாய் இருந்தனர், பின்னர் பல்வேறு காரணங்களால் மாயன் நாகரீகம் அழிய தொடங்கியது.

மாயன் சார்ந்த பல ஆய்வுகள் நடைபெற்று கொண்டுவரும் நிலையில் தற்போது மாயன் எழுத்துக்கள் நிறைந்த பண்டைய புத்தகம் ஒன்று கிடைத்துள்ளது, அதனை புரிந்து கொள்ளும் முயற்சியில் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் மாயன்களால் நடத்தப்பட்டவைகள் என்ன என்பது விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

மாயன் உரை :

கிடைக்கப்பெற்றுள்ள பழமையான புத்தகம் தான் அமெரிக்க வரலாற்றிலேயே எழுதப்பட்ட மிகப்பழைமையான புத்தகம் ஆகும். அந்த பண்டைய மாயன் உரையை - டிரெஸ்டென் கோடக்ஸ் என்று குறிப்பிடுகின்றனர்.

ஆரம்ப மாயா விஞ்ஞானி :

ஒரு புதிய ஆய்வின் மூலம் ஒரு ஆரம்ப மாயா விஞ்ஞானி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பு வானியல் சார்ந்த ஒரு முக்கிய கண்டுபிடிப்பு செய்து இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

வானியல் தரவு :

அந்த பண்டைய புத்தகத்தில் வீனஸ் என்று அட்டவணை உரை பகுதிகளாக எழுதப்பட்டுள்ளது. அதில் முக்கியமான விடயம் என்னவென்றால் அது கணிதம் அடிப்படையில் எழுதப்படாத ஒரு வானியல் தரவு.

முன்னோடி :

அதாவது இதுவொரு மாயன் சமூகத்தின் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த அறிவியல் சாதனைக்கான ஒரு முன்னோடி வடிவம்.

வானவியலாளர் :

இதிலிருந்து தனிப்பட்ட மாயன் வேலையை பார்க்க முடிகிறது அந்த மாயன் நபரை நிச்சயமாக ஒரு வானவியலாளர் அல்லது ஒரு விஞ்ஞானி என்று அழைக்கலாம் என்றும் மானிடவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

படைப்பாற்றல் :

அந்த நபர் தன் படைப்பாற்றல் மூலம் ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட காலத்தில் நிகழ்ந்தவைகளுக்கான சாட்சியாய் திகழ்கிறார் அதற்கு அவர் கணிதத்தையும் பயனப்டுத்தியுள்ளார்.

டெர்மினல் கிளாசிக் :

அந்த எழுத்துக்கள் மூலம் வீனஸ் இயக்கங்கள் தொடர்பான குறிப்புக்கள் பெறப்படுகிறது உடன் அவைகள் 800 -1000 கி.பி. என்ற டெர்மினல் கிளாசிக் காலத்தில் குறிப்பெழுதப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட சடங்கு :

மாயன்கள் இந்த வீனஸ் குறிப்புகளை தங்கள் சடங்கு சுழற்சிகளுக்காக பயன்படுத்தி இருக்கலாம், ஒரு முழு நகரமும் ஒன்றுகூடி வீனஸ் தோன்றுகையில் குறிப்பிட்ட சடங்குகளை செய்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

எண்கணித பயிற்சி :

இந்த வீனஸ் அட்டவணைகளுக்கான புதிய விளக்கம் சரியென்றால், பண்டைய மாயன்களின் கணித கணக்கீடுகள் அடிப்படையில் ஒரு எண்கணித பயிற்சி இல்லை என்பது நிரூபிக்கப்படும்.

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
This ancient text reveals a Maya astronomer calculated the movements of Venus over a millennium ago. Read more about this in Tamil GizBo
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்