விண்வெளி நிலையத்தில் இருந்து ஜன்னல் வழியாக பார்த்தபோது..??!

Written By:

சர்வதேச விண்வெளி நிலையங்களுக்குள் இருந்து கொண்டு விண்வெளியின் ஒட்டுமொத்த அழகையும் ஆழத்தையும் கண்களால் அளந்து பார்த்து விட வேண்டும் என்ற ஆசை பெரும்பாலும் நம் அனைவருக்கும் உண்டு. இந்த ஆசையின் போது நாம் ஒரு விடயத்தை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும் - அழகு மிகவும் ஆபத்தானது..!

அது என்ன மாதிரியான ஆபத்து என்பதை, சமீபத்தில் பிரிட்டிஷ் விண்வெளி வீரர் டிம் பீக் எடுத்த புகைப்படத்தை பார்த்தல் புரிந்து விடும்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

பூமி கிரக சோதனைகள் மற்றும் கண்காணிப்புகள் ஆகியவைகளை நிகழ்த்த உருவாக்கப்பட்ட சர்வதேச விண்வெளி நிலையம் தான் எட்டு ஜன்னல்கள் கொண்ட - கிபோலா (the Cupola).

#2

ஆய்வில் ஈடுபடும் போது, கால் அங்குலம் ( 7 - மிமீ ) விட்டம் கொண்ட பிளவு ஒன்று கிபோலாவின் ஜன்னல் ஒன்றில் பிரிட்டிஷ் விண்வெளி வீரர் டிம் பீக் கண்டறிந்துள்ளார்.

#3

விண்வெளியில் எண்ணில் அடங்காத விண்கற்கள், விண்வெளி பொருட்கள் மட்டுமின்றி நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிலான மனிதனால் உருவாக்கம் பெற்ற விண்வெளி குப்பைகளும் உள்ளன அவைகள் ஸ்பேஸ் டெப்ரிஸ் (Space debris) எனப்படுகின்றன.

#4

"விண்வெளி நிலையங்கள் மீது விண்வெளி குப்பையானது மோதும் என்ற அச்சம் எப்போதும் எனக்கு உண்டு, ஆனால், நல்லவேளையாக விண்வெளி கலங்களின் கண்ணாடிகள் நான்கு மடங்கு பலமானதாக மேருகேற்றபட்ட ஒன்றாக இருக்கிறது" என்று கூறியுள்ளார் டிம் பீக்.

#5

மேலும், இதொன்றும் புதிதான ஒரு சம்பவம் அல்ல, வழக்கமான ஒன்று தான். பெரும்பாலும் இந்த பிளவு ஏதாவது ஒரு பெயிண்ட் துகள்கள் அல்லது சிறிய உலோக துண்டு மூலம் ஏற்பட்டு இருக்கலாம்" என்றும் டிம் பீக் தெரிவித்துள்ளார்.

#6

"இதுபோன்ற விண்வெளி குப்பைகள் மூலம் எப்போதும் பாதிப்புகள் ஏற்படாது என்று கூறிவிட இயலாது. நொடிக்கு சுமார் 7.66 கிமீ வேகத்தில் பூமியை நோக்கி சரியும் விண்வெளி நிலையத்தின் மீது மோதும் சிறிய பொருள் தாக்கத்தை ஏற்படுத்தும்" என்றும் டிம் பீக் பீதியை கிளப்பி உள்ளார்.

#7

விண்வெளி நிலையத்தின் கண்ணாடிகள் சிலிக்கா மற்றும் போரோசிலிகேட் மூலம் தயாரிக்கப்பட்டு ஏராளமான பாதுகாப்பு தொழில்நுட்ப பகுதி சோதனைகளுக்கு உள்ளாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

#9

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
An astronaut on the space station just looked out the window and saw this. Read more about this in Tamil Gizbot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்