சனிக்கோளின் வளையத்தின் மீது மோதிய மர்ம பொருள்..!

Written By:

மிகவும் அழகான சனிக்கோளின் வளையங்கள், பெரும்பான்மையாக பனித்துகள்களாலும் பாறைத்துகள்கள் மற்றும் தூசிகளாலும் ஆனவை...!

சனி கிரகமானது " சூரியக் குடும்பத்தின் நகை " என்று அழைக்கப்படுகிறது. மின்னும் பிங்குகல் , சாம்பல் சாயல்கள் மிக முக்கியமாக அதன் மிக நேர்த்தியான மோதிரங்கள் பார்ப்பதற்கு அதை ஒரு ஓவியம் போலவே காட்டுகிறது. சமீபத்தில், சனிக்கோளின் வளையத்தின் மீது வளையங்களில் ஒன்றோடு மர்மமான பொருள் ஒரு மோதல் நிகழ்த்தியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

சமீபத்தில், நாசாவின் காசினி விண்கல ஆய்வின் மூலம் சனியின் வளையங்களில் ஒன்றில் ஒரு விசித்திரமான விஷயம் ஒன்றை விஞ்ஞானிகள் கவனித்துள்ளனர்.

#2

மணிக்கு ஆயிரக்கணக்கான மைல்கள் வரையிலான வேகத்தில் சுழலும் சனிக்கோளின் வளையங்கள் ட்ரில்லியன் கணக்கிலான வெவ்வேறு தூசிகள், பாறைகள் மற்றும் கிரகத்தை சுற்றியுள்ள பனி சுற்றி துகள்களால் உருவாக்கம் பெற்றவைகள் ஆகும்.

#3

அந்த துகள்களின் அளவானது ஒரு மணல் துகள் அல்லது ஒரு தானிய வடிவில் தொடங்கி ஒரு உயரமான கட்டிடம் வரையிலான அளவில் சுழலுகின்றன.

#4

அதன் வளையங்கள் சுமார் 30 முதல் 300 அடி அளவில் தடித்தவைகளாக இருக்கலாம் மற்றும் அவைகள் இணைந்து சுமார் 175,000 மைல்கள் சனி கிரகத்தை சுற்றிக்கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

#5

சமீபத்தில் சனிக்கோளின் கடைக்கோடி தனி மோதிர வளையமான எஃப் வளையம் மீது ஏதோ ஒரு மர்மமான பொருள் இடையூறு செய்துள்ளது..!

#6

சனிக்கோளின் அந்த எஃப் வளையம் தான் சூரிய மண்டலத்திலேயே மிக தீவிரமாக இயங்கும் ஒரு வளையம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

#7

வளையத்திற்குள் புகுந்த மர்ம பொருள் ஆனது அதன் சுழற்சியில் சில மணி நேரம் மாற்றம் ஏற்பட காரணமாய் இருந்துள்ளது என்று நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

#8

மோதல் நேர்ந்த ஒரு சில தினங்களில் (அதாவது கடந்த மாதம் ஏப்ரல் 8) இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுவிட்டது. இந்த இடைப்பட்ட இரண்டு மாதங்களில் மீண்டும் பழைய நிலைக்கே அந்த எஃப் வளையம் திரும்பி இருக்கும் என்று நம்பப்படுகிறது.

#9

மர்மம் : வரலாற்றுக்கு முந்தையகால மண்டையோடுகளில் புல்லட் ஓட்டை..!?


விண்வெளியில் முதல் முறையாக சமச்சீரற்ற மூலக்கூறு கண்டுபிடிப்பு.!!

#10

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
A mysterious object just disturbed one of Saturn's rings. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்