6000 ஆம் ஆண்டு பழமை வாய்ந்த உலகின் முதல் வானியல் தொலைநோக்கி.!!

By Meganathan
|

வரலாற்றுக்கு முந்தைய கல்லறைகள் பெரும்பாலும் பல ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களின் உறங்கும் இடமாக விளங்குகின்றது. போர்ச்சுகல் நாட்டில் அமைந்திருக்கும் 6000 ஆண்டு பழமை வாய்ந்த கல்லறைகளை லென்ஸ் இல்லாத உலகின் முதல் வானியல் தொலைநோக்கியாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என ஐக்கிய ராச்சியத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அமைப்பு

அமைப்பு

இந்தக் கல்லறைகளில் இருக்கும் நடை பாதை போன்ற அமைப்பு இதனை லென்ஸ் இல்லாத தொலைநோக்கி போன்று வெளிப்படுத்துவதாக வானியலாளர் ஃபேபியோ சில்வா தெரிவித்துள்ளார்.

மாற்றம்

மாற்றம்

இதன் அமைப்பு வானத்தைப் பார்க்கும் போது உங்களது பார்வையை மூன்று அல்லது நான்கு கோணங்களில் பரிசீலிக்கச்செய்யும்.

காட்சி

காட்சி

வானில் தெரியும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களை தவிர்த்து வானத்தின் குறிப்பிட்ட பகுதியைப் பார்க்க இதன் வடிவமைப்பு வழி செய்யும்.

பெருங்கற்கள்

பெருங்கற்கள்

பெருங்கற்களின் அமைப்பு மங்கலான சூழல் இருளிலும் வானத்தின் சிறிய விடயங்களையும் சிரமம் இல்லாமல் பார்க்க வழி செய்யும்.

வாயில்

வாயில்

போர்ச்சுகல் பகுதியில் இருக்கும் இந்த வாயில்கள் அனைத்தும் சரியான திட்டமிட்டு அதன் பின் உருவாக்கப்பட்டவை என இந்த ஆய்வுக் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அமைப்பு

அமைப்பு

இந்தக் கல்லறைகளின் அமைப்பு மிகவும் பிரகாசமான நட்சத்திரமான ரோகிணியைச் சரியாக பார்க்க வழி செய்வதாக அமைந்துள்ளது.

குறிப்பு

குறிப்பு

வெவ்வேறு பருவங்களை குறித்து வைக்க நமக்கு முன் வாழ்ந்த முன்னோர்கள் கல்லறைகளை பயன்படுத்தி இருக்கின்றனர். இதன் மூலம் வசந்த காலங்களில் உயர்வான பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்பதை அவர்கள் அறிந்து வைத்திருப்பர் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆய்வு

ஆய்வு

நாட்டிங்ஹாம் நகரில் நடைபெற்ற தேசிய வானியல் கருத்தரங்கில் இந்த ஆய்வு சமர்ப்பிக்கப்பட்டது. பல்வேறு கோணங்களில் இந்த ஆய்வு தொடர்ந்து மேற்கொள்ளப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிச்சம்

வெளிச்சம்

இந்த ஆய்வின் மூலம் பண்டைய காலத்தில் கல்லறைகள் உண்மையில் பயன்படுத்தப்பட்ட காரணத்தை அறிந்து கொள்ள வழி செய்வதோடு தொடர்ச்சியான ஆய்வுகளில் இதன் முழு காரணத்தை அறிந்து கொள்ள முடியும்.

பகுதி

பகுதி

வட மேற்கு ஐரோப்பாவின் அட்லாண்டிக் கடற்கரையோரம் ஆயிரக்கணக்கான கல்லறைகள் இருக்கின்றன. இவை எதற்காகப் பயன்படுத்தப்பட்டன என்பதே பல்வேறு ஆய்வாளர்களின் கேள்வியாக இருக்கின்றது.

Best Mobiles in India

English summary
6,000-year-old tomb might be world's first astronomy telescope Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X