ஒரு நாள் 8 மணி நேரம், ஒரு ஆண்டு 1400 நாட்கள் என்றாகும், எப்போது..!?

Written By:

நிலவு - பூமி கிரத்தில் மிக மிக அருகில் இருப்பதுபோல் நம் கண்களுக்கு தெரியலாம். ஆனால், பூமிக்கும் நிலவிற்கும் இடையே உள்ள தூரம் என்னவென்று தெரியுமா..? - 384,400 கிலோமீட்டர்கள். இப்பெரும் இடைவெளி கொண்டும் நம் பூமியின் எல்லா வகையான பரிணாம வளர்ச்சிக்கும் நிலவு துணை புரிந்துள்ளது, புரகிறது..!

சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக கருதப்படும் பூமியின் துணைக்கோள் ஆன நிலவு ஒருவேளை இல்லாமல் போயிருந்தால் பூமிகிரக வாசிகளும், பூமி கிரகமும் மிகவும் சிக்கலான விபரீதமான விளைவுகளை சந்திக்க நேரிடும்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

விளைவு 05 :

மிகவும் அடர்த்தியான இருள்..!

மிக கடினம் :

நிலவு இல்லையென்றால் பூமி கிரகத்தின் இரவு பொழுதுகள் மிக மிக மிக இருள் நிறைந்ததாக இருக்கும்.விண்வெளியில் நிலவிற்கு அடுத்தபடியாக ஒளி வீசும் கிரகம் வீனஸ் தான், அதனிடம் இருந்து பூமிக்கு தேவையான ஒளி கிடைப்பது மிக கடினம்..!

விளைவு 04 :

கடல் அமைப்பில் சூரிய கட்டுப்பாடு..!

கடல் அலை கட்டுப்பாடு :

பூமியில் உள்ள கடல்களின் அலைகளின் அளவில் மாற்றம் ஏற்படும், அதாவது நிலவு இல்லையெனில் கடல் அலைகளின் கட்டுப்பாட்டை முழுமையாக சூரியன் எடுத்துக்கொள்ளும் ஆக மிகவும் சிறிய அளவிலான கடல் அலைகள் மட்டுமே எழும்பும்.

விளைவு 03 :

கிரகணங்கள் காணமல் போகும்..!

கிரகணங்கள் இல்லை :

பூமி, சந்திரன் மற்றும் சூரியன் இல்லமால் கிரகணங்கள் இல்லை ஆக நிலவு இல்லையென்றால் எந்த விதமான கிரகணமும் ஏற்படாது..!

விளைவு 02 :

பூமியின் நாள் நேரம் ஆகியவைகள் குறையும்..!

அலை உராய்வு :

நிலவு பூமிக்கு வழங்கும் கடல் அலை உராய்வு இல்லையெனில் பூமியின் ஒரு நாள் ஆனது 6 முதல் 8 மணி நேரமாக குறையும் அப்படியென்றால் ஒரு ஆண்டுக்கு 1,100 முதல் 1,400 நாட்கள்..!

விளைவு 01 :

பூமியின் அச்சு சாய்வு மாறும்..!

வானிலை :

சூரியனை சுற்றி அதன் கோளப்பாதையிலில் 23.5 டிகிரி அச்சு சாய்வில் பூமி சுழன்று கொண்டிருக்கிறது, நிலவு இல்லாத பட்சத்தில் பூமி கிரகத்தின் அச்சு சாய்வு கண்டபடியாக கட்டுப்பாடின்றி மாறிக்கொண்டே இருக்கும். அப்படி நிகழ்ந்தால் எந்த ஒரு பூமி பிரதேசத்திற்கும் நிலையான பருவ நிலை இருக்காது. கடும் பனி, கடும் வெயில் என வானிலை கணிக்க முடியாத அளவு மாறிக் கொண்டே இருக்கும்.

மேலும் படிக்க :

எதற்கு விளக்கம் கிடைத்தாலும் கிடைக்கும் இதற்கு கிடைக்காது-கிடையாது..!


உலகின் பேரழிவு பற்றி தீர்கதரசியின் 'நரக' வரைபடம் கண்டுபிடிப்பு..!

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
5 surprising consequences for life on Earth if the moon never existed. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்