1000 ஆண்டு ரகசியம் : வாய்பிளக்க வைக்கும் தமிழர் தொழில்நுட்பம்.!!

|

நம் முன்னோர்கள் எதைச் செய்தாலும் அதில் ஆயிரம் அர்த்தங்கள் மறைந்திருக்கும். அவர்கள் பின்பற்றிய பழக்கவழக்கங்களில் துவங்கி அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையில், இன்றைய தொழில்நுட்ப யுகத்திலும் நாம் அறிந்திராத, புரிந்து கொள்ள முடியாத பல்வேறு அறிவியல் அர்த்தங்கள் இருந்திருக்கின்றன.

இந்நிலையில் நம் முன்னோர்களால் கட்டப்பட்ட பல்வேறு கோவில்களும், கட்டிடங்களும் இன்று உலகப் பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டும் வருகின்றன. இவ்வாறு பாதுகாக்கப்பட்டு வரும் கோவில்களில் ஒன்றான தஞ்சை பெருவுடையார் அல்லது பெரிய கோயில் தன்னுள் மறைத்து வைத்திருக்கும் சில அதிசயங்கள் மற்றும் அதன் பின் மறைந்து கிடக்கும் தொழில்நுட்ப மர்மங்கள் குறித்த தொகுப்பு தான் இது.

01

01

உலக பாரம்பரிய சின்னமாகவும், இந்தியாவின் மிகப்பெரிய கோவில்களில் ஒன்றாகவும் தஞ்சை பெருவுடையார் கோவில் விளங்குகின்றது.

02

02

தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் அமைந்திருக்கும் பெரிய கோவில் குறித்து நாம் அறிந்த தகவல்கள் மற்றும் சிறப்புகள் மிகவும் குறைவு தான். நிழல் தரையில் விழாத கட்டிட அமைப்பு, மற்றும் இதற்குப் பயன்படுத்தப்பட்ட கருவிகள் குறித்த மர்மம் இன்றளவும் நீடிக்கின்றது.

03

03

தஞ்சைப் பெரிய கோவில் குறித்துப் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இன்று வரை இதன் கட்டமைப்புப் பணிகள், அதற்குப் பயன்படுத்தப்பட்ட கருவிகள் குறித்து எவ்விதமான உறுதியான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை, மாறாகப் பல்வேறு சாத்தியக்கூறுகள் மட்டும் இருக்கின்றது.

04

04

தஞ்சை பெருவுடையார் கோவில் சோழ பேரரசன் ராஜராஜனால் கிபி 1006 ஆம் ஆண்டுத் துவங்கி 1010 ஆம் ஆண்டுக் கட்டிமுடிக்கப்பட்டது நாம் அனைவரும் அறிந்ததே. இதன் கட்டமைப்பு இன்றளவும் பல்வேறு ரகசியங்களைக் கொண்டிருக்கின்றது.

05

05

இக்கோவில் அமைந்திருக்கும் நிலப்பகுதியில் வெறும் வண்டல் மண் நிறைந்ததாகும், அங்குப் படர்ந்த கருங்கல், உயர்ந்த கிரானைட் கற்கள் எப்படி வந்தன கிரானைட் கற்கள் எதைக் கொண்டு வெட்டப்பட்டன, என்பன போன்ற கேள்விகளுக்கு இன்றளவும் பதில் இல்லை.

06

06

இன்றளவும் பூமியின் மிகவும் உறுதியானதாகக் கருதப்படும் கிரானைட் கற்களை வைரக் கற்கள் கொண்ட கருவிகள் மூலம் வெட்டப்படுகின்றன, ஆனால் சோழர்கள் இந்தக் கற்களை 1000 ஆண்டுகளுக்கு முன்பே கட்டுமான பணிகளில் பயன்படுத்தி இருக்கின்றனர்.

07

07

கோவில் முழுவதும் பல்வேறு சிற்பங்கள், சிலைகள் மற்றும் கல்வெட்டுகளும் நிரம்பியிருக்கின்றது. இதோடு மிகவும் நுணுக்கமான துளைகள் சோழர்கள் பயன்படுத்திய கருவிகள் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றது.

08

08

பெருவுடையார் கோவிலின் சுவர்களில் மிகவும் நுணுக்கமான துளைகள் சீராகச் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் இலை மட்டுமே நுழையும் அளவு துளை இருப்பதால் சோழர்கள் எதைக் கொண்டு இதனைச் செய்திருப்பர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

09

09

இது ஒரு பக்கம் இருந்தாலும், இந்தத் துளைகள் எதற்காகச் செதுக்கப்பட்டன என்பதும் கேள்விக்குறியாகவே இருந்தாலும், பல ஆய்வாளர்களும் இது அலங்காரமாகக் கருதி செதுக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கின்றனர்.

10

10

இத்தகைய சிறிய துளைகள் செதுக்கப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மிகவும் பழமை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்றாலும் இது குறித்த மர்மம் இன்றளவும் நீடிக்கின்றது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
1000 Year Old Secret Drilling Technology Revealed Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X