இசட்டிஈ நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் வெளியானது

By Meganathan
|

இசட்டிஈ நிறுவனம் நுபியா இசட்9 ஸ்மார்ட்போனை வெளியிட்டதை தொடர்ந்து க்யூ519டி என்ற பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனினை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.6000 என நிர்ணயக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமாக 35 நாட்கள் ஸ்டான்ட்பை வழங்கும் 4000 எம்ஏஎஹ் பேட்டரியை குறிப்பிடலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் நீலம், கோல்டு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கின்றது.

இசட்டிஈ நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் வெளியானது

டூயல் சிம் கொண்ட இசட்டிஈ க்யூ519டி 5 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே கொண்டு ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் மூலம் இயங்குகின்றது. 1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர் மற்றும் 1ஜிபி ரேமும் வழங்கப்பட்டுள்ளது.

மெமரியை பொருத்த வரை 8 ஜிபி இன்டர்னல் மெமரியும், கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றது. 5 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், 2 எம்பி முன்பக்க கேமரா மற்றும் 3ஜி, GPRS/ EDGE, வை-பை 802.11 b/g/n, மைக்ரோ-யுஎஸ்பி, LTE மற்றும் ப்ளூடூத் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
ZTE, soon after launching the Nubia Z9 smartphone in China, has now unveiled yet another smartphone, the Q519T.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X