நீங்கள் ஹெச்பி லேப்டாப் பயனரா.?? உங்களுக்கு 'திகிலூட்டும்' ஒரு எச்சரிக்கை.!

Written By:

ஸ்மார்ட்போன்கள் மீது அதிக நம்பிக்கை இல்லாத அல்லது ஸ்மார்ட்போன்களிலேயே அனைத்து பணிகளையும் செய்திட முடியாது என்ற நிலைப்பாட்டில் தான் லேப்டாப்களில் (அதாவது பெர்சனல் கம்ப்யூட்டர்கள்) தனித்தன்மை மிகுந்த வேளைகளில் ஈடுபடும் பழக்கம் நம்மில் பலருக்கும் உள்ளது. ஆனால், சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள மோட்ஸீரோ ஆராய்ச்சியாளர்களின் குற்றசாட்டு நம்மை ஒருமுறைக்கு இருமுறை லேப்டாப்களில் டைப் செய்யலாமா என்று யோசிக்க வைக்கும் உள்ளன.

இரண்டு டஜன்களுக்கும் மேலான மாடல்களில் மடிக்கணினிகள் மற்றும் டேப்லட்களை தயாரித்து விற்கும் நிறுவனமான ஹெச்பி மீது மிகப்பெரிய குற்றசாட்டு ஒன்றை வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் எழுப்பி உள்ளனர். எச்பி பயனர்களை பீதியில் ஆழ்த்தியுள்ள இந்த குற்றசாட்டு தான் என்ன.?? இது சார்ந்த விளைவுகள் என்ன.?? ஆராய்ச்சியாளர்களின் கருத்து என்ன.?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
இரகசியமாக

இரகசியமாக

மிகவும் பிரபலமான எச்பி மடிக்கணினிகள் மற்றும் டேப்லெட்டுகள் அனைத்துமே பயனர்களின் ஒவ்வொரு கீஸ்ட்ரோக்-தனையும் இரகசியமாக கண்காணிக்கின்றன என்று பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ட்ரைவ் சேமிப்பில்

ட்ரைவ் சேமிப்பில்

ஒவ்வொரு கீஸ்ட்ரோக்தனையும் கண்காணிப்பது மட்டுமின்றி, கண்காணித்து பின்னர் அவைகளை சாதனத்தில் உள்ள ஹார்ட் ட்ரைவ் சேமிப்பில் ஒரு குறியாக்கப்படாத கோப்பில் முக்கிய அழுத்தங்களை சேமிக்கின்றன என்றும் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கணினி நிரல்

கணினி நிரல்

இந்த சேமிப்பை பாதிக்கப்பட்ட ஹெச்பி சாதனங்களில் சேர்க்கப்பட்டுள்ள ஆடியோ சிப்ஸ் உற்பத்தியாளரான கோனெக்சாண்ட் (Conexant) தயாரித்த ட்ரைவரில் குறியாக்கப்பட்ட கீலாக்கர் (அதாவது கணினி பயனரால் செய்யப்படும் ஒவ்வொரு விசயமும் பதிவு செய்யும் ஒரு கணினி நிரல்) பதிவாகிறது.

ஏற்கனவே

ஏற்கனவே

கிடைக்கப்பட்டுள்ள மெட்டா தகவல் அடிப்படையிலான கோப்புகளின் கீழ், இந்த கீலாக்கர் குறைந்தது கிறிஸ்துமஸ் 2015 முதல் ஹெச்பி கணினிகளில் ஏற்கனவே உள்ளது என்பதையும் கண்டறியப்பட்டுள்ளது.

காலவரையின்றி

காலவரையின்றி

இந்த குறிப்பிட்ட பதிவு கோப்பானது சி:யூசர்பப்ளிக்மைக்ட்ரே.லாக் (C:UsersPublicMicTray.log) என்பதில் இடம்பெற்றுள்ளது மற்றும் ரீபூட் செய்யும் ஒவ்வொரு முறையும் ஓவர்ரைட் ஆகும். ஆனாலும் கூட உள்ளடக்கம் பல வாரங்களாக, அல்லது காலவரையின்றி உயிர் பிழைக்கக்கூடிய பல வழிகளும் உள்ளன என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளன.

கணிப்பீடு

கணிப்பீடு

தடயவியல் கருவிகள் எளிதாக நீக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட கோப்புகளை மீண்டும் உருவாக்குகின்றன. இந்த நிகழ்வில், கணிப்பீடு எப்பொழுதும் பின்சேமிப்பு செய்யப்படுகிறது.

கடவுச்சொற்கள், மின்னஞ்சல்கள்

கடவுச்சொற்கள், மின்னஞ்சல்கள்

இது விசைப்பலகை மீது தட்டச்சு செய்யப்பட்ட அனைத்தை பற்றிய முழுமையான வரலாற்று சார்ந்த காப்பு பிரதியை எடுத்துக்காட்டுகிறது. இதில் கடவுச்சொற்கள், மின்னஞ்சல்கள் மற்றும் தொடர்புகளும் உள்ளடக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
Your HP computer may be at risk, warn researchers. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்