உங்கள் பாக்கெட்டிற்குள் கைவிட திட்டம் போடும் ரேன்சம்வேர், உஷார்.!

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை குறிவைக்கிறது ரேன்சம்வேர் வைரஸ்.!

By Prakash
|

ரேன்சம்வேர் வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் உள்ள அரசு மற்றும் பெரு நிறுவன அலுவங்களில் உள்ள கம்யூட்டர்களை ஹேக் செய்து வருகிறது. மன்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் ரேன்சம்வேர் வைரஸ் திறக்கும் போது கணினியின் தகவல்கள் முழுவதையும் ஆக்கிரமிப்பு செய்கிறது,இதனால் இந்தியா உட்பட வங்கதேசம் மற்றும் அமரிக்க, ஐரோப்பிய நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்றும் பாதிக்கப்பட்ட நாடுகள் ஆலோசித்து வருகின்றன.

ரேன்சம்வேர் வைரஸ் பொருத்தமாட்டில் பலவேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன, தற்போது அந்தவரிசையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை குறிவைத்துள்ளது, ரேன்சம்வேர் வைரஸ்.

ரேன்சம்வேர்:

ரேன்சம்வேர்:

ரேன்சம்வேர் தாக்குதல் பொருத்தவரை இந்தியாவில் அதன் தாக்கம் ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கிறது, இருந்தாலும் உலகஅளவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்ப்படுத்தியுள்ளது, இதன்பாதிப்பை சரிபடுத்தும் நிலையை இதுவரை கண்டுபிடிக்கமுடியவில்லை என இந்திய கணினி அவசரநிலை குழு இயக்குனர் ஜெனரல் சஞ்சய் பால் தெரிவித்தார்.

ஸ்மார்ட்போன்கள்:

ஸ்மார்ட்போன்கள்:

ரேன்சம்வேர் அடுத்த தாக்குதல் பொருத்தமாட்டில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை குறிவைத்துள்ளது என சில அறிவிப்புகள் வெளியாகி உள்ளன, மேலும் நூற்றுக்கணக்கான கணினிகள் விண்டோஸ் இயக்க கணினிகள் மற்றும் மடிக்கணினிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஹேக்கர்கள்:

ஹேக்கர்கள்:

ஹேக்கர்கள் எப்போதும் இரண்டு படிகள் முன்னால் இருப்பார்கள். இது இந்த குறிப்பிட்ட தாக்குதல் முடிவுக்கு வருமா அல்லது அது வரவிருக்கும் தாக்குதலில் மாறுபாடு உள்ளதா என்று தெரியவில்லை. என சஞ்சய் பால் கூறினார.

 85 இயந்திரங்கள் :

85 இயந்திரங்கள் :

இந்திய கணினி அவசரநிலை குழு அறிவிப்பு பொருத்தவரை புதன்கிழமை மாலையில் ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதலில் 85 இயந்திரங்கள் பாதிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் நுட்ப வல்லுனர்கள் :

தொழில் நுட்ப வல்லுனர்கள் :

தொழில் நுட்ப வல்லுனர்கள் கூறியது என்னவென்றால் வங்கி, சில்லறை விற்பனை மற்றும் உற்பத்தி போன்ற இடங்களில் மிகுந்த பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது, 40,000 க்கும் அதிகமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்கள்.

காஸ்பர்ஸ்கி:

காஸ்பர்ஸ்கி:

சைமென்டெக் மற்றும் காஸ்பர்ஸ்கி ஆய்வகம் திங்களன்று அறிவித்த அறிக்கையில் மென்பொருளில் பல்வேறு பாதிப்புகள் ஏற்ப்பட்டுள்ளன. மேலும் மென்பொருள் தொழில்நுட்பம் மிகுந்தபாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது, பல நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள் இது வடகொரியாவின் ஹேக்கிங் நடவடிக்கையாக இருக்கலாம் என அறிவித்துள்ளனர்

சைபர் செக்யூரிட்டி:

சைபர் செக்யூரிட்டி:

தற்போது குறைந்த வேகத்திலேயே செயல்பட்டுவரும் ரேன்சம் வேர் தாக்குதல், விரைவில் புதிய அச்சுறுத்துல்களுடன் விரைந்து தாக்கும் என சைபர் செக்யூரிட்டி பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

வைரஸ்:

வைரஸ்:

உலகளாவிய அளவில் வைரஸ் 150 நாடுகளில் குறைந்தது 200,000 கணினிகள் பாதிக்கப்பட்டுள்ளன, என்று அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் இதன் வரிசையில் அடுத்தது ஸ்மார்ட்போன்கள் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Your Android smartphone could be ransomwares next big target : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X