டோரண்ட் டவுன்லோடு ஜெயிலுக்கு அனுப்பும் : பீதியைக் கிளப்பும் விதிமுறை.!!

By Meganathan
|

எல்லாப் பிரச்சனையும் கிக் ஆஸ் டோரண்ட்ஸ் இணையதளம் முடக்கப்பட்டதில் இருந்து துவங்கியது எனலாம். உலகளாவிய தகவல் திருட்டு இணையதளத்தினை அமெரிக்க புலனாய்வு அமைப்பின் அதிகாரிகளால் சில வாரங்களுக்கு முடக்கப்பட்டது. பின் டோரண்ட் எனும் மற்றொரு இணையதளமும் எவ்வித காரணமும் இன்றி திடீரென தனது சேவையினை நிறுத்துவதாக அறிவித்தது.

இதையும் படியுங்கள் : புதுவகை பிளே ஸ்டேஷன் 4 செப்டம்பரில் வெளியாகலாம்.??

எனினும் டோரண்ட் இணையதளம் சில தினங்களில் புதிய இணையதள முகவரி மூலம் தனது சேவையைத் தொடர்ந்து வழங்கி வந்தது. இந்நிலையில் டோரண்ட் பயனர்களைப் பீதியில் ஆழ்த்தும் விதமாக புதுவித எச்சரிக்கை செய்தி நேற்று முதல் வெளியான படி இருக்கின்றது. இது குறித்த விரிவான தகவல்கள் ஸ்லைடர்களில்..!

எச்சரிக்கை

எச்சரிக்கை

டோரண்ட் தளத்தினை பயன்படுத்தி தரவுகளை டவுன்லோடு செய்தால் மூன்றாண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.3,00,000 அபராதம் செலுத்த நேரிடும் என்ற எச்சரிக்கை டோரண்ட் பயனர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

குழப்பம்

குழப்பம்

டோரண்ட் பயனர்கள் மத்தியில் பீதியை கிளப்பியிருக்கும் இந்த எச்சரிக்கைக்கு உண்மை பின்னணி இங்கு தான் துவங்கியது.

காப்புரிமை

காப்புரிமை

டிஷூம் என்ற திரைப்படத்தின் காப்புரிமை பிரச்சனை தொடர்பான மும்பை உயர்நீதிமன்றத்தின் தகவல் அறிக்கையை ஸ்பைசி ஐபி எனும் தனியார் நிறுவனம் வெளியிட்டிருந்தது.

தகவல்

தகவல்

மும்பை உயர்நீதிமன்றம் வழங்கிய தகவல் அறிக்கையில் தடை செய்யப்பட்ட இணையதளங்களில் காப்புரிமை விதிகள் குறித்த விளக்கச் செய்தியினை இண்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்கள் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்திருந்தது. இதில் குறிப்பிட்ட தளம் ஏன் தடை செய்யப்பட்டுள்ளது என்பதற்கான காரணத்தையும் பதிவு செய்ய வேண்டும் என்ற தகவலும் இடம் பெற்றிருந்தது.

டாடா

டாடா

மும்பை உர்நீதிமன்றம் பிறபித்த உத்தரவினை செயல்படுத்துவதில் தொழில்நுட்ப கோளாறுகள் இருக்கின்றது என டாடா நிறுவனம் சார்பில் பதில் அளிக்கப்பட்டது. இதன் பின் தடை செய்யப்பட்ட இணையதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் எச்சரிக்கை தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எச்சரிக்கை

எச்சரிக்கை

அதன் படி டோரண்ட் இணையதளங்களில் வெளியான எச்சரிக்கை தகவலில் இந்திய காப்புரிமை சட்டம் குறித்த விவரங்களும் அவற்றை மீறும் பட்சத்தில் வழங்கப்படும் தண்டனை குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

மால்வேர்

மால்வேர்

இதையடுத்து தடை செய்யப்பட்ட இணையதளங்களை ஓபன் செய்தல் மற்றும் பிரவுஸிங் செய்யும் போது எவ்வித பிரச்சனையும் இல்லை, மாறாக இலவச இணைப்பாக உங்களது கணினியில் மால்வேர் பிரச்சனைகள் ஏற்படலாம்.

டவுன்லோடு

டவுன்லோடு

குறிப்பாகத் தடை செய்யப்பட்ட இணையதளங்களைப் பயன்படுத்தினால் பிரச்சனையில்லை, மாறாகத் திருட்டு தகவல்களை டவுன்லோடு செய்தால் தண்டனை நிச்சயம்.

இதையும் படியுங்கள்

இதையும் படியுங்கள்

பேராபத்தை 18-ஆம் நூற்றாண்டிலேயே கணித்த தீர்க்கதரிசி..!

ஒன்பது லக்கினங்களில் உச்சம் பெற்றவரும் சிக்கும் 'மின்-வலை'.!!

Best Mobiles in India

English summary
You won't go to jail for just visiting a Torrents website Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X