கார் மோதி பேய் மரணம்..!

Posted by:

பேய் - பொதுவாக பலருக்கும் அச்சம் தரும் ஒரு விடயம். அதை வைத்து பல புரளிகள், பல ஏமாற்று வேலைகள் தினம் தினம் அரங்கேறி கொண்டே தான் இருக்கின்றது, முக்கியமாக - பேய் வீடியோக்கள்..!

பேய் பயந்தாங்கோளி; "உள்ளேன் அய்யா..!"

அம்மாதிரியான வீடியோக்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று நிஜமான பேய் வீடியோ ஆதாரங்கள் மற்றொன்று பேய் இருப்பது போல் சித்தரிக்கப்படும் வீடியோக்கள். இந்த இரண்டு வீடியோக்களையும் தூக்கி சாப்பிடும் ஒரு வகை உண்டு, அதுதான் - ப்ரான்க் (PRANK) வீடியோக்கள்.

பேய் பயந்தாங்கோளி - பாகம் 2..!

அது மாதிரியான ஒரு ப்ரான்க் வீடியோவால் நடந்த தவறுகளும், கொடூரங்களும் பல. அப்படியாக, பேயையே கொல்ல பார்த்த ஒரு சம்பவம் சார்ந்த விடயங்களை பற்றிதான் நாம் பின் வரும் ஸ்லைடர்களில் காண இருக்கின்றோம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ப்ரான்க் (PRANK) என்றால் குறும்பு, சேட்டை, நடைமுறை கேலி என்று மட்டும் அர்த்தம் தராது, தீங்கு விளைவிக்கும் நடத்தை என்றும் அர்த்தம் தரும்.!

பேய் போல் வேஷம் போட்டுக் கொண்டு, முன் பின் அடையாளம் தெரியாத நபர்களை பயமுறுத்தி அதை மறைந்திருந்து வீடியோ எடுப்பது தான் கோஸ்ட் ப்ரான்க் வீடியோ..!

இந்த பிரான்க் வீடியோக்கள் 'யூ ட்யூப்'பில் நிரம்பி வழியும் பல வகையான பிரபல வீடியோக்களில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.!

இது போன்ற பெரும்பாலான பிரான்க் வீடியோக்கள் 'யூ ட்யூப்'பில் பணம் பார்க்கவே 'அப்லோட்' செய்யப்படுகின்றன..!

அது போல், பேய் ப்ரான்க் வீடியோ எடுக்கும் குழுவான 'பாப்பா கிரேஸி'யை (PAPA CRAZY) சேர்ந்த நடிகருக்கு நடந்தது - ஒரு கொடூரம்..!

ஆளில்லாத நடு சாமத்தில், பேய் வேடம் போட்ட இருவர், ரோட்டில் வரும் கார்களின் முன்னும் பின்னும் குதித்து, அவர்களை பயமுறுத்தி, அதை மறைந்திருந்து வீடியோ எடுக்க வேண்டும் என்பது தான் அவர்கள் திட்டம்..!

திட்டமிட்டபடி ஒரு கார் வரும் போது, முன் பக்கமாய் பேய் வேடம் போட்ட ஒருவர் வருகிறார்..!

அதை கண்டு பயந்து போன கார் டிரைவர் பின்னால் செல்லும் போது பின் பக்கமாய் இன்னொரு பேய் வேடமிட்ட நபர் வந்து பயமுறுத்த...

முற்றிலுமாய் பயந்து போன அந்த கார் டிரைவர், வேகமாக காரை ஒட்டிக் கொண்டு சென்று முன் பக்கமாய் பேய் வேடம் போட்ட நபரை மோதி தூக்கிப்போட்டு விட்டு, வேகமாய் சென்று விடுகிறார்..!

பேய் வேடம் போட்ட நபருக்கு பலத்த காயம்.. இந்த வீடியோ இப்போது 'யூ ட்யூப்'பில் வைரலாக ஓடிக் கொண்டி இருக்கிறது..! அந்த வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்..!

இது குறித்து 'பாப்பா கிரேஸி' குழு 'யூ ட்யூப்'பில் "ஒரு சிறந்த ப்ரான்க் வீடியோ தவறாகி விட்டது. அந்த கார் டிரைவர் பயங்கரமான பேய் ஒன்றை கொன்று விட்டார்..!" என்று 'நக்கலாக' கருத்து சொல்லியுள்ளது..!

இது போன்ற ப்ரான்க் வீடியோக்களுக்கு என்றே, பல வலைதளங்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது..!

சொல்லப்போனால் ப்ரான்க் வீடியோக்கள் அமெரிக்காவில் தான் மிக பிரபலம். எல்லா மேற்கத்திய கலாசாரத்தைப் போலவே இதுவும் இந்தியாவில் பரவி விபரீதமாக விளையாடிக் கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Check out here the You tube Ghost Prank video Goes wrong. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

Social Counting