ஸ்மைலிக்கள் தான் இனி உங்கள் பாஸ்வேர்டு..!

|

முதலில் வார்த்தைகள் இல்லாத இடங்களில் மௌனம் பேசியது. இப்போதெல்லாம் ஸ்மைலி தான் பேசுகிறது.

ஸ்மைலிக்கள் தான் இனி உங்கள் பாஸ்வேர்டு..!

கண்ணீர், காதல், முத்தம், வலி என தீவிரமான ஸ்மைலிக்கள் தொடங்கி நக்கல் சிரிப்பு, நையாண்டி கேலி என ஸ்மைலிக்கள் நம் டெக்ஸ்ட் உரையாடல்களுக்கு மிகவும் அத்தியாவசியமாகிவிட்டது என்று கூட கூறலாம்.

குளிர்சாதனப் பெட்டியின் அடுத்த லெவல்..!

வார்த்தைகளுக்கான இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும் அளவிற்கு நமக்கெல்லாம் ஸ்மைலிக்கள் பிடித்துப்போய் விட்டது. இப்போது அந்த ஸ்மைலிக்கள் நம் பாஸ்வேர்டுகளிலும் விரைவில் இடம் பிடிக்கப்போகிறது.

1300 பேரில், மூன்றில் ஒரு பங்கு மக்கள் தங்கள் பின் நம்பர்களை, பாஸ்வேர்டுகளை மறந்து போகின்றனர். மறுபக்கம், இந்த நூற்றாண்டு மக்களில் 64% பேர் வெறும் ஸ்மைலிக்களை மட்டுமே பயன்படுத்தி உரையாடுகின்றனர் என்பதை ஆராய்ச்சியின் மூலம் கண்டு பிடித்த இன்டெலிஜன்ட் என்விராய்ன்மென்ட்ஸ் நிறுவனம், இந்த செக்கீயூரீட்டி முறையை வெளியிட்டுள்ளது.

ஸ்மைலிக்கள் தான் இனி உங்கள் பாஸ்வேர்டு..!

மூளை கற்பனையால் இயங்க வல்லதே தவிர, நம்பர்களால் அல்லது வார்த்தைகளால் அல்ல. அதுதான் பாஸ்வேர்டுகளை பலரும் மறக்க காரணம் என்கிறார்கள் வல்லுநர்கள். இந்த முறையில் 44 ஸ்மைலிகள் இடம் பெறுகின்றன, அதை கொண்டு 3,498,308 வரிசை மாற்றங்களை உருவாக்க முடியும். இந்த வகை பாஸ்வோர்ட்டுகள் மற்றவைகளை விட 480 மடங்கு பாதுகாப்பானதாகுமாம்.

இன்க் வேணாம், இந்த பேனா எதை ஊத்தினாலும் எழுதும்..!

இப்பிடியே போன... பாஸ்வேர்டு நல்லா ஞாபகம் இருக்கும். ஆனா, ஏ பி சி டி மறந்துடுமே..! சரி அப்புறம் என்னப்பா, பள்ளி பாடத் திட்ட்ததுல ஸ்மைலி-யை இணைத்து விடலாமா..?!

Best Mobiles in India

Read more about:
English summary
This technology enables consumers to log into their banking app using four emoji characters, instead of traditional PINs or passwords.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X