பில்டிங் ஸ்ட்ராங்கு... பேஸ்மண்ட்டும் ஸ்ட்ராங்கு..!

Posted by:

"சரி எல்லோரும் வாங்க, இந்த மலையை தூக்கி என் கையில கொடுத்தீங்கனா.. நான் இந்த மலைய தூக்க ரெடி"னு சொல்லி அதுக்கு அப்புறம் செந்தில் வாங்கின 'அடி' ஞாபகம் இருக்கா.. அந்த மாதிரியான அடி இங்க யாருக்கும் விழாது. ஏன்னா... இனிமே வெயிட்டான பொருளை தூக்கும் போது யார் உதவியும் நமக்கு இனி தேவையே இல்லீங்க..!

நீங்க சொல்றது தப்ப்ப்பு, திருத்திக்கோங்க ப்ளீஸ்..!

இன்னும் சொல்லப் போனால்.. இனிமே உங்க சக்திக்கு மீறின எடையை கூட உங்களால அசால்ட்டா தூக்க முடியும். அதெப்படினு கேக்குறீங்களா..? கீழ வர்ற ஸ்லைடர்களை பாருங்கள், அது அப்படித்தான்னு நல்லா புரியும்..! கூடவே, பாடியும் பேஸ்மண்ட்டும் ஸ்ட்ராங் ஆகுற வித்தையும் புரியும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ரோபோமேட் :

இது தான் ரோபோமேட் எக்ஸோ ஸ்கேலிட்டன் (Robomate Exoskeleton)..!

அதிகமான எடை :

இதனினைக் கொண்டு உங்களை விட 10 மடங்கு அதிகமான எடையை கூட உங்களால் எளிதாக தூக்க முடியுமாம்..!

கை :

அப்படி தூக்கும் போது 10 கிலோ எடையானதை, 1 கிலோவைப் போல உங்கள் கை உணருமாம்..!

பயன்பாடு :

பெரிய தொழிற்சாலைகள், ஆராய்ச்சிக் கூடங்கள், புணர்வாழ்வு, ராணுவம் போன்றவைகளில் இது பெரிதும் பயன்படும் என்கிறார்கள்..!

தொழிலாளிகள் :

உலகில் உள்ள பெரும்பாலான தொழிலாளிகள் தசைப்பிடிப்பு, தசை முறிவு போன்றவைகளால் பாதிக்கப் படுவதை மனத்தில் கொண்டு உருவானதுதான் இது..!

பணிகள் :

2013-ஆம் ஆண்டில் இருந்தே இதை உருவாக்குவதற்க்கான பணிகளை தொடங்கி விட்டார்களாம்..!

பாதிப்பு இன்றி :

இது முதுகு தண்டு, கால்கள் மற்றும் கைகளுக்கு எந்த பாதிப்பும் இன்றி அவைகளுக்கு அதிக பலம் சேர்க்குமாம்..

துணை :

கனமான எடையை தூக்கும் போது, ரோபோமேட் எக்ஸோ ஸ்கேலிட்டன் ஆனது கைகளுக்கு துணையாக செயல் பட்டு, எடையை 90% வரை குறைக்குமாம்..!

தொகுதிகள் :

கை, முதுகு, கால் என ரோபோமேட் எக்ஸோ ஸ்கேலிட்டனின் அத்துணை தொகுதிகளும் தூக்கும் எடையை பொறுத்து ஒன்று பட்டு செயல்படுமாம்..!

சோதனைகளுக்கு பின் :

இன்னும் பல தரப்பட்ட சோதனைகளுக்கு பின், இது தினசரி பயன்பாட்டிற்க்கு வர இருக்கிறதாம்..!

நக்கல்ஸ் :

"அதெல்லாம் இருக்கட்டும்.. சரி முதல்ல உன்னை நீ தூக்கி காட்டு"னு போன் பண்ணிலாம் கேக்க கூடாது.. தப்பு.. ஓகே வா..!?

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Check out here how you can lift more weight than your natural ability. This is very interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்