ரூ.2000க்கு ஸ்மார்ட் ஷூ வெளியிட்டது சியோமி

Written By:

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி தனது பெயரில் புதிய கருவிகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. இந்த பட்டியலில் புதிதாக இணைந்திருப்பது ஸ்மார்ட் ஷூ. லி-நிங் நிறுவனத்துடன் இணைந்து சியோமி புதிய ஸ்மார்ட் ஷூக்களை அறிமுகம் செய்திருக்கின்றது.

ரூ.2000க்கு ஸ்மார்ட் ஷூ வெளியிட்டது சியோமி

சியோமி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டிருந்தாலும் இதன் பெயர் லி-நிங் என்றே வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் விலை இந்தியாவில் ரூ.2,036 மற்றும் ரூ.4,083 என்று நிர்ணயக்கப்பட்டுள்ளன.

ரூ.2000க்கு ஸ்மார்ட் ஷூ வெளியிட்டது சியோமி

இந்த இரு ஷூக்களிலும் ஸ்மார்ட்போனுடன் இணைந்து கொள்ளும் புதிய ப்ளூடூத் சிப், மிலிட்டரி கிரேடு மோஷன் சென்சார் சிப் வழங்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் குறைந்தது ஒர் ஆண்டு வரையேனும் ஒழுங்காக வேலை செய்யும்.

ரூ.2000க்கு ஸ்மார்ட் ஷூ வெளியிட்டது சியோமி

இந்த ஷூக்கள் வாட்டர் ப்ரூஃப், வியர்வை ப்ரூஃப் என்பதோடு அழுத்தங்களை தாங்க கூடியது. இவை நடக்கும் தூரத்தை ட்ராக் செய்து உடலில் ஏற்ப்பட்டிருக்கும் மாற்றங்களை துல்லியமாக கணக்கிடும். லி-நிங் ஸ்மார்ட் ஷூ விற்பனை ஜூலை மாதம் 20 ஆம் தேதி முதல் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதோடு உலகளவில் வெளியாகும் தேதி தொடர்ந்து மர்மமாகவே வைக்கப்பட்டுள்ளது.

Source: Gizmo China

 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
The Chinese-based firm, Xiaomi has introduced a pair of Smart Shoes in partnership with Li-Ning.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்