இந்தியாவில் சியோமி ரெட்மி நோட் 4ஜி விலை குறைப்பு..!

Written By:

எதிர்பார்த்ததை போன்று சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 4ஜி மாடல் விலையினை ரூ.2,000 வரை குறைத்திருக்கின்றது. தற்சமயம் சியோமி ரெட்மி நோட் 4ஜி ரூ.7,999க்கு கிடைக்கும். வெளியாகும் போது இதன் விலை ரூ.9,999 என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விலை குறைவானது இன்று முதல் அமல் செய்யப்படுகின்றதோடு இந்த சலுகையினை எம்ஐ.காம், ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் ஸ்னாப்டீல் தளங்களிலும் தி மொபைல் ஸ்டோர் மற்றும் ஏர்டெல் ஸ்டோர்களிலும் செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சியோமி ரெட்மி நோட் 4ஜி விலை குறைப்பு..!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரெட்மி நோட் 4ஜி ரூ.9,999க்கு அறிமுகமானதோடு ப்ளாஷ் விற்பனை மூலம் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் கிடைக்கும் படி இருந்தது, பின் அந்நிறுவனம் ஸ்மார்ட்போனினை மற்ற இணையதளங்களிலும் கிடைக்கும் படி செய்தது. இந்த விலை குறைப்பு சந்தையில் கிடைக்கும் மற்ற விலை குறைந்த 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் என்று சியோமி நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

இந்தியாவில் சியோமி ரெட்மி நோட் 4ஜி விலை குறைப்பு..!

இதன் சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.5 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 400 குவாட்கோர் பிராசஸர் மற்றும் 2 ஜிபி ராம் கொடுக்கப்பட்டுள்ளது. கேமராவை பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா, 8 ஜிபி இன்டெர்னல் மெமரியோடு 3100 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Xiaomi India has announced a price cut for the Redmi Note 4G, making the smartphone Rs. 2,000 cheaper than its launch price.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்