ஜனவரி முதல் ரூ.11,999/-க்கு சியோமி ரெட்மீ நோட் 4, என்னென்ன அம்சங்கள்.?

சமீபத்தில், சியோமி ரெட்மீ நோட் 4 கருவியானது சீன சான்றிதழ் தளத்தில் (TENAA) காணப்பட்டது.

Written By:

சீன தொழில்நுட்ப நிறுவனமான சியோமி இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பெரிய அளவிலான ஆதிக்கத்தை காட்டி வருகிறது. சீன பொருளை கண்டாலே வெறுத்து ஒதுக்கும் (முக்கியமான மொபைல் கருவிகளை) இந்தியர்கள் இப்பொது சியோமி நிறுவன ஸ்மார்ட்போன்களை நம்பிக்கைக்கு உரிய கருவிகளாய் பார்க்கிறாரக்ள் என்றால் அதற்கு சியோமியின் விலை, தரம் மற்றும்கவர்ச்சிகரமான வடிவமைப்புகள் காரணமாகும்.

அப்படியாக, இந்தாண்டு பல கருவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்த சியோமி நிறுவனம் இப்போது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அதன் புதிய பிளாக்ஷிப் கருவியான சியோமி ரெட்மீ நோட் 4 கருவியை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

விலை

சியோமி ரெட்மீ 3 வெற்றியை தொடர்ந்து சியோமி ரெட்மீ நோட் 4 கருவி இந்திய மொபைல் போன் சந்தையை குறி வைத்து ரூ.11,999/- என்ற விலையில் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் இந்தியாவில் தொடங்கப்படலாம் என்கிறது மேட்கெட்ச் வலைப்பதிவு தகவல் ஒன்று.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஸ்னாப்டிராகன் 625 சிப்செட்

சமீபத்தில், சியோமி ரெட்மீ நோட் 4 கருவியானது சீன சான்றிதழ் தளத்தில் (TENAA) காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சமீபத்திய கசிவின் படி ரெட்மீ நோட் 4 கருவியானது 5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே மற்றும் 1.4ஜிகாஹெர்ட்ஸ் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

3ஜிபி ரேம், 32ஜிபி சேமிப்பு

மேலும் மேட்கெட்ச் வலைப்பதிவு அறிக்கையில். ஸ்னாப்டிராகன் 625 எஸ்ஓசி மாறுபாடு கொண்ட 2ஜிபி / 3ஜிபி / 4ஜிபி ரேம் விருப்பங்களில் சியோமி கருவிகள் இந்தியாவி வெளியாகும் என்றும் கூறியுள்ளது. சியோமி ரெட்மீ நோட் 4 கருவியை பொருத்தமட்டில் 3ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி நீட்டிக்கும் வசதி கொண்ட 32 ஜிபி சேமிப்பு ஆகியவைகள் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ

கேமிரா துறையை பொருத்தமட்டில் இரட்டை எல்இடி ஃப்ளாஷ் கொண்ட 13எம்பி பின்பக்க கேமிரா மற்றும் 5எம்பி முன்பக்க கேமிரா கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. உடன் இக்கருவியை சியோமி கஸ்டம் எம்ஐயூஐ (MIUI) உடனான ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ இயங்குதளம் எதிர்பார்க்கப்படுக்கிறது.

கைரேகை ஸ்கேனர், பேட்டரி திறன்

இறுதியாக இக்கருவியின் பின்பக்கத்தின் மேல் பாதியில் ஒரு கைரேகை ஸ்கேனர் இருக்கலாம் என்றும் மற்றும் இக்கருவி ஒரு 4000எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்டிருக்கலாம் என்றும் கசிவு தகவலால் தெரிவிக்கின்றன.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்



Read more about:
English summary
Xiaomi Redmi Note 4 likely to be launched in India in January at Rs 11,999. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்