சியோமி ரெட்மீ நோட் 4 : இன்று இரண்டவது பிரத்தியேக விற்பனை.!

முந்தைய வாய்ப்பை தவறவிட்டு விட்டீர்கள் என்றால் இம்முறை கிடைக்கும் மற்றொரு பொன்னான வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.!

|

இந்த மாத முற்பகுதியில் அறிமுகமாகி பரபரப்பாக விற்பனையாகி வரும் சியோமி ரெட்மீ நோட் 4 கருவியின் பிரத்தியேக விற்பனையொன்று இன்று 12 மணியளவில் ப்ளிப்கார்ட் மற்றும் மி.காம்வலைத்தளங்களில் நிகழவுள்ளது. ஜனவரி 23-ஆம் தேதி இந்தியாவில் வெற்றிகரமாக அதன் முதல் சுற்று விற்பனையை முடித்த சியோமி ரெட்மீ நோட் 4 கருவி ஒரு சில விநாடிகளில் அவுட் ஆப் ஸ்டாக் ஆகிவிடும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.!

ரெட்மீ நோட் 4 கருவிக்கு கிடைத்த பெரிய வரவேற்பை மனதில் கொண்டு சியோமி நிறுவனம் இந்த இரண்டாவது விற்பனையை நிகழ்த்துகிறது. ஆக, இந்த வழக்கில் நீங்கள் முந்தைய வாய்ப்பை தவறவிட்டு விட்டீர்கள் என்றால் இம்முறை கிடைக்கும் மற்றொரு பொன்னான வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். உடன் சியோமி ரெட்மீ நோட் 4 கருவியின் விலை மற்றும் அம்சங்களை பற்றிய விரிவான தகவல்களுக்கு தொடரவும்.!

எந்தெந்த மாறுபாடுகள் என்னென்ன விலையில்

எந்தெந்த மாறுபாடுகள் என்னென்ன விலையில்

சியோமி ரெட்மீ நோட் 4 கருவி இந்தியாவில் மூன்று வகைகளில் கிடைக்கும் : 2ஜிபி ரேம் / 32ஜிபி உள்ளடக்கிய சேமிப்பு மாதிரியானது ரூ.9,999/-க்கும், 3ஜிபி ரேம் / 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாதிரியானது ரூ.10,999/-க்கும், 4ஜிபி ரேம் / 64ஜிபி உள்ளடக்கிய சேமிப்பு மாதிரியானது ரூ.12,999/-க்கும் கிடைக்கிறது. அனைத்து மூன்று வகைகளுமே திங்கள் முதல் விற்பனைக்கு வருகிறது மற்றும் இதற்காக எந்த விதமான முன் பதிவும் தேவையில்லை.

ஆண்ட்ராய்டு

ஆண்ட்ராய்டு

இரட்டை சிம் (மைக்ரோ + நானோ) ஆதரவு வழங்கும் இக்கருவி ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ சார்ந்த எம்ஐயூஐ (MIUI) 8 மூலம் இயக்கப்படுகிறது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

ஒரு 5.5-அங்குல முழு எச்டி (1080x1920 பிக்சல்கள்) 2.5டி வளைந்த கண்ணாடி 401பிபிஐ பிக்சல் அடர்த்தி கொண்ட டிஸ்ப்ளேவும் கொண்டுள்ளது. மேலும் மாலி டி880, எம்பி 4 ஜிபியூ கொண்ட டீகா -கோர் மீடியா டெக் ஹெலியோ எக்ஸ்20 மூலம் இயக்கப்படுகிறது.

கேமிரா

கேமிரா

கேமிரா துறையை பொருத்தமட்டில் சியோமி ரெட்மீ நோட் 4 கருவியானது பிடிஏஎப் (PDAF), எப்/2.0 அப்பெர்ஷர், டூவல் டோன்டு எல்இடி பிளாஷ் கொண்ட ஒரு 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 85 டிகிரி லென்ஸ் கொண்ட 5 மெகாபிக்சல் அளவிலான முன்பக்க கேமிரா கொண்டுள்ளது.

ஹை-ப்ரிட் டூவல் சிம்

ஹை-ப்ரிட் டூவல் சிம்

இந்த ஸ்மார்ட்போன் ஹை-ப்ரிட் டூவல் சிம் ஆதரவை வழங்குகிறது அதாவது ஒரு கலப்பு இரட்டை சிம் அட்டை ஸ்லாட் உடன் மைக்ரோஎஸ்டி அட்டை (128ஜிபி வரை) ஒன்றையும் ஆதரிக்கிறது.

பேட்டரி

பேட்டரி

இக்கருவி ஸ்மார்ட்போன் ஒரு 4100எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. அளவீடுகளில் 151x76x8.35எம்எம் மற்றும் 175 கிராம் எடை கொண்டுள்ளது

கைரேகை ஸ்கேனர்

கைரேகை ஸ்கேனர்

தவிர இக்கருவியில் கைரேகை ஸ்கேனர், ஒரு அகச்சிவப்பு சென்சார் ஆகியவைகளும் அடக்கம். இணைப்பு விருப்பங்களை பொருத்தமட்டில் ஜிபிஆர்ஸ்/எட்ஜ், 4ஜி வோல்ட், ப்ளூடூத், ஜிபிஎஸ், மைக்ரோ-யுஎஸ்பி மற்றும் கிளோ நாஸ் ஆகியவைகள் அடங்கும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ரெட்மீ நோட் 4 போனால் என்ன.? உங்களுக்கு பல ஆப்ஷன்கள் இருக்கு.!

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Note 4 to go on sale today in India, exclusively on Flipkart and Mi.com. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X