உங்கள் கைகளை அலங்கரிக்க வருகிறது சியாமியின் ஸ்மார்ட் வாட்ச்

Written by: Super Admin

சீன நிறுவனத்தின் சியாமி தயாரிப்புகள் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென ஒரு கம்பீரமான இடத்தை பிடித்துவிட்ட நிலையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி ரெட்மி 4 மற்றும் ரெட்மி நோட் 4 ஆகிய தயாரிப்புகளை வெளியிடவுள்ளது.

உங்கள் கைகளை அலங்கரிக்க வருகிறது சியாமியின் ஸ்மார்ட் வாட்ச்

இந்த தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று கருதப்படும் நிலையில் இவைகளை அடுத்து சியாமி நிறுவனம் ஸ்மார்ட் வாட்ச் ஒன்றையும் விரைவில் வெளியிட உள்ளதாகவும், அனேகமாக இம்மாத இறுதியில் இந்த ஸ்மார்ட் வாட்ச் உங்கள் அழகிய கைகளை அலங்கரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் கூறப்படுகிறது.

ஹவாய் பி9 ஸ்மார்ட்போனின் பத்து சிறப்பு அம்சங்களை பார்ப்போமா?

Weibo என்ற சீன இணையதளம் இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் ரெட்மி ஸ்மார்ட் போன்கள் போல இந்த ஸ்மார்ட் வாட்சுகள் மலிவான விலையில் இருக்க வாய்ப்பில்லை என்றும் அந்த இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

உங்கள் கைகளை அலங்கரிக்க வருகிறது சியாமியின் ஸ்மார்ட் வாட்ச்

மற்ற சியாமி தயாரிப்புகள் போல இதன் விலையையும் எதிர்பார்த்தால் நீங்கள் ஏமாறக்கூடிய நிலை ஏற்படும் என கூறப்படுகிறது. இந்த புதிய வாட்சின் ஸ்கெட்ச் இமேஜ் இணையதளங்களில் வெளிவந்த போதிலும் இதுகுறித்த முழுமையான தகவல்கள் இன்னும் கசியவில்லை. இந்த ஸ்மார்ட் வாட்சின் விலை சரியாக என்னவாக இருக்கும் என்று தெரியாவிட்டாலும் அனேகமாக $150 முதல் $200 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செகண்ட் ஹேண்ட் போன்களை விற்பனை செய்ய சாம்சங் திட்டம்.!?

கூகுள், ஆப்பிள் நிறுவனங்களின் ஸ்மார்ட் வாட்சை போல இந்த ஸ்மார்ட் வாட்சும் பொதுமக்களை கவர்ந்திழுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
As we already know that Xiaomi is already gearing up for an event to held on August 25 to launch the Redmi 4 and Redmi Note 4. There are some strong rumors saying that the Chinese company might also unveil a smartwatch.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்