ரகசியமாய் கசிந்த சியோமி அம்சங்கள்.!

Written By:

சியோமி எம்ஐ 5எஸ் கருவி வெளியாக சில தினங்களே இருக்கும் நிலையில் அந்தக் கருவி குறித்த சல தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன. கிஸ்மோசைனா தளத்தின் புதிய அறிக்கையின்படி தயாரிப்பு பணிகளில் இருக்கும் கருவியின் புகைப்படம் கசிந்திருப்பதாகவும், இதில் கருவியின் பின்புறம் மற்றும் கேமரா போன்றவை தெரிவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் அல்ட்ரா சோனிக் தொழில்நுட்பம் பயன்படுத்தும் புத்தம் புதிய கைரேகை ஸ்கேனர் ஒன்றும் தெரியவந்திருக்கின்றது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

கைரேகை ஸ்கேனர்

சியோமி எம்ஐ 5 கருவியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கைரேகை ஸ்கேனர் அம்சம் இறுதியில் வழங்கப்படவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சியோமி எம்ஐ 5எஸ்

தற்சமயம் கசிந்திருக்கும் புதிய புகைப்படங்களில் சியோமி எம்ஐ 5எஸ் கருவியில் கைரேகை ஸ்கேனர் அம்சம் இருப்பது உறுதியாகியுள்ளது. புதிய கைரேகை ஸ்கேனர் தொழில்நுட்பத்தை ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம் செய்யும் நிறுவனமாக சியோமி இருக்கும்.

புகைப்படங்கள்

கசிந்திருக்கும் புகைப்படங்கள் @KJuma என்ற பெயரில் வெளியாகியுள்ளது. இப்புகைப்படங்கள் கருவியின் முன்பக்கம் மற்றும் பின்புறம் போன்றவற்றைக் காண்பிக்கின்றது.முதல் புகைப்படத்தில் கருவி வெள்ளை நிறத்தில் இருக்கின்றது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

குவால்காம் சென்ஸ் ஐடி

மேலும் முன்பகுதியின் கீழ் இரு புள்ளிகள் நடுவே காணப்படுகின்றது. முன்பு வெளியான படத்திலும் கைரேகே ஸ்கேனர் காணப்பட்டது. மீண்டும் குவால்காம் சென்ஸ் ஐடி தொழில்நுட்பம் கொண்ட கைரேகை ஸ்கேனரையே பயன்படுத்துகின்றது.

அல்ட்ராசோனிக் தொழில்நுட்பம்

குவால்காம் நிறுவனத்தின் படி புதிய கைரேகை ஸ்கேனரானது விரலில் அழுக்கு இருந்தாலும், தூசிகள் இருந்தாலும் கண்டுபிடிக்கும் எனத் தெரிவித்துள்ளது. இது அல்ட்ராசோனிக் தொழில்நுட்பம் மூலம் சாத்தியமாகின்றது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்Read more about:
English summary
Xiaomi Mi 5S images leak ahead of official launch Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்