வேற லெவலில் வெளியாகும், சியோமி மி 5சி : லைவ் லீக் தகவல்கள்.!

சியோமி மி 5சி கருவியானது டிசம்பர் 6-ஆம் தேதி வெளியாகும் என்ற துணுக்குடன், புகைப்படங்களும் 'லீக்' ஆகியுள்ளன.

|

இந்தியாவில் ஒரு பெரிய அளவிலான வாடிக்கையாளர்களையும் ரசிகர்களையும் ஆட்க்கொண்ட சியோமி நிறுவனத்தின் சியோமி மி 5சி கருவி சார்ந்த வதந்தி சிறிதளவு ஆங்காங்கே வெளியாகி கொண்டிருந்த தருணத்தில் தற்போது வெளியாகியுள்ள புதிய கசிவின் மூலம் பெரிய அளவிலான ஆர்வத்தை தூண்டியுள்ளது.

சமீபத்திய கசிவின் மூலம் இந்த நொடியில் இருந்து அடுத்த டிசம்பர் 6-ஆம் தேதிக்கும் எப்போது வேண்டுமானாலும் இக்கருவியின் வெளியீடு இருக்கலாம் என்று சூசகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சியோமி மி 5சி கருவியின் லைவ் வீடியோ க்ராப்டு படங்கள் மீண்டும் ஆன்லைனில் வெளியாகியுள்ளன இம்முறை ஸ்மார்ட்போனின் அனைத்து கோணங்களும் தெளிவாக காட்டப்பட்டுள்ளன. அதன் மூலம் எங்களுக்கு தெரிய வரும் அம்சங்கள் என்னென்ன என்பதை பற்றிய தொகுப்பே இது.!

விலை ரூ. 9,900/-

விலை ரூ. 9,900/-

ஆண்ட்ராய்டுப்யூர் (AndroidPure) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சியோமி மி 5சி கருவியானது டிசம்பர் 6-ஆம் தேதி அன்று சீனா நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் ஸ்மார்ட்போன் விலையானது சுமார் ரூ.9,900/-ஐ சுற்றி இருக்கும் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 12-ஆம்..?

டிசம்பர் 12-ஆம்..?

இதற்கு முந்தைய அறிக்கையில் வெளியான தகவலில் சமீபத்திய நிர்ணய விலையை காட்டிலும் சற்று அதிக விலை (சுமார் ரூ. 14,800) நிர்ணயிக்கப்பட்டிருந்தது மற்றும் டிசம்பர் 12-ஆம் தேதியன்று வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த இரண்டு தகவலில் எது நிஜமானது என்பது வெளியீட்டு மற்றும் விலை விவரங்கள் குறித்து சியோமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு செய்தால் மட்டுமே அறிந்துக்கொள்ள முடியும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மெல்லிய ஃப்ரேம் மற்றும் கைரேகை ஸ்கேனர்

மெல்லிய ஃப்ரேம் மற்றும் கைரேகை ஸ்கேனர்

மேலும் வெளியான சியோமி மி 5சி கருவியின் லீக் ஆன நேரடி படங்களில் இருந்து கருவியின் அதிக அம்சங்கள் அறியப்படுகிறது. முந்தைய கசிவில் காணப்படும் ஒரே விஷயங்கள் மீண்டும் தெரியவர அதுதவிர்த்து அதன் சுற்று முனைகள் ஒரு மெல்லிய ஃப்ரேம் மற்றும் ஹோம் பட்டனுக்கு மேல் கைரேகை ஸ்கேனர் கொண்டுள்ளதையும் இப்போதைய கசிவில் காண முடிகிறது.

எம்ஐயூஐ 8 ஓஎஸ்

எம்ஐயூஐ 8 ஓஎஸ்

வால்யூம் மற்றும் பவர் ஆகிய இரண்டு பட்டன்களுமே வலது விளிம்பில்வைக்கப்பட்டுள்ளன மற்றும் ப்ளாஷ் உடன் கேமரா மேல் வலது ஓரத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஸ்பீக்கர் கிரில் ஆதி பகுதியிலும் அமைந்துள்ளது முக்கியமாக கருப்பு வண்ண மி 5சி கருவியானது சியோமியின் எம்ஐயூஐ 8 ஓஎஸ் மூலம் இயங்கும் என்பது போல தெரிகிறது

முழு எச்டி டிஸ்ப்ளே

முழு எச்டி டிஸ்ப்ளே

சியோமி மெரி என்றும் அழைக்கப்படும் சியோமி மி 5சி கருவியில் 5.5 இன்ச் (1080x1920 பிக்சல்கள்) 403பிபிஐ பிக்சல் அடர்த்தி கொண்ட முழு எச்டி டிஸ்ப்ளே, 1.4ஜிகாஹெர்ட்ஸ் கொண்ட ஆக்டா-கோர் செயலி உடன் 3ஜிபி ரேம் மட்டும் ஏஆர்எம் மாலி-டி860 ஜிபியூ இருக்கலாம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ 6.0

ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ 6.0

இந்த ஸ்மார்ட்போன் எம்ஐயூஐ ஓஎஸ் தவிர்த்து (பெட்டிக்கு வெளியே) ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ 6.0 மூலம் இயக்கப்படலாம் மற்றும் என்எப்சி அடிப்படையிலான முறைகளை ஆதரிக்கும். இறுதியாக, சியோமி மி 5சி ரோஸ் கோல்ட், கோல்ட் மற்றும் கருப்பு நிற வகைகளில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

சியோமி பிரியர்களே, இதோ உங்களுக்காகவே ஆன்லைனில் லீக் ஆன மி மிக்ஸ் நானோ.!

Best Mobiles in India

Read more about:
English summary
Xiaomi Mi 5c Tipped to Launch on December 6 as Live Images Leak Alongside. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X