அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய சியோமி எம்ஐ 4ஐ சிறப்பம்சங்கள்

By Meganathan
|

சியோமி நிறுவனம் எம்ஐ 4ஐ எனும் புதிய ஸ்மார்ட்போனினை வியாழன் கிழமை வெளியிட்டது. ஸ்னாப்டிராகன் 615 கொண்ட இந்த ஸ்மார்ட்போன் எம்ஐ போன்களின் இரண்டாவது வெளியீடு என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை வெளியானதில் இந்த ஸ்மார்ட்போன் மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது.

பயனுள்ள பல சிறப்பம்சங்கள், சிறந்த வடிவமைப்பு மற்றும் குறைந்த விலை என இதற்கு பல காரணங்களை கூற முடியும்,

அடுத்து வரும் ஸ்லைடர்களில் சியோமி எம்ஐ 4ஐ ஸ்மார்ட்போனின் தலை சிறந்த சிறப்பம்சங்களை பாருங்கள்..

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

எம்ஐ 4ஐ ஸ்மார்ட்போனில் 5 இன்ச் டிஸ்ப்ளே 1080பி ரெசல்யூஷன் வழங்கப்பட்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே ஐபோன் 6 மாடலில் இருப்பதை விட சிறப்பாக நிறங்களை காட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் சிறப்பம்சமானது வெளிபுறங்களில் இருக்கும் வெளிச்சத்திற்கு ஏற்ப போனின் ப்ரைட்னஸை தானாக மாற்றியமைக்கும்.

கேமரா

கேமரா

எம்ஐ 4ஐ கேமராவானது five-element லென்ஸ் கொண்டு வடிவமைக்கப்பட்டிருப்பதோடு ஐபோன் 6 கேமரா போன்று துள்ளியமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டூயல் டோன் ப்ளாஷ் கொண்டு 13 எம்பி இமேஜ் சென்சார் கொண்ட ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா மற்றும் பல சிறப்பம்சங்களை வழங்கியுள்ளது.

ஆன்டிராய்டு லாலிபாப் MiUI

ஆன்டிராய்டு லாலிபாப் MiUI

ஆன்டிராய்டு லாலிபாப் மற்றும் MiUI கொண்டு வெளியான முதல் இந்திய ஸ்மார்ட்போன் எம்ஐ 4ஐ மட்டுமே. இதன் மூலம் தமிழ் உட்பட் பல மொழிகளை சப்போர்ட் செய்யும் என்பதோடு பல சிறப்பம்சங்களையும் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி

பேட்டரி

5 இன்ச் ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும் போது மிக பெரிய பேட்டரியை வழங்கியிருப்பது எம்ஐ 4ஐ மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 3120 எம்ஏஎஹ் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

சியோமி எம்ஐ 4ஐ , இரு சிம் கார்டுகளிலும் 4ஜி நெட்வர்க் சப்போர்ட் செய்கின்றது. மேலும் LTE, 2ஜி, 3ஜி மற்றும் ஏசி ப்ரோடோகால் மூலம் வைபை கனெக்ட் செய்யும் வசதி மற்றும் இன்பில்ட் ஓடிஜி வழங்கப்பட்டுள்ளது.

விலை

விலை

எம்ஐ 4ஐ 16 ஜிபி ரூ.12,999 என விலை நிர்ணயக்கப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெற இருக்கின்றது, இதன் விற்பனை ப்ளாஷ் முறையில் நடைபெற இருக்கின்றதோடு இதற்கான முன்பதிவு வியாழன் இரவு 8 மணி முதல் துவங்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
here you find Xiaomi Mi 4i Top features you should know right now. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X