முன்பதிவு இல்லாமல் நேரடி விற்பனைக்கு வருகின்றது சியோமி எம்ஐ4ஐ

Written By:

சியோமியின் புதிய வெளியீட்டை முன்பதிவு இல்லாமல் வாங்க முடியும். அட ஆமாங்க ப்ளிப்கார்ட் தளத்தில் மே மாதம் 25 மற்றும் 26ஆம் தேதி சியோமி எம்ஐ4ஐ ஸ்மார்ட்போனினை முன்பதிவு இல்லாமல் வாங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக லெனோவோ மற்றும் ப்ளிப்கார்ட் இணைந்து ஏ6000 ஸ்மார்ட்போனினை நேரடி விற்பனை செய்ய இருப்பதாக தெரிவித்திருந்தது.

முன்பதிவு இல்லாமல் நேரடி விற்பனைக்கு வருகின்றது சியோமி எம்ஐ4ஐ

இந்திய சந்தைில் சியோமி நிறுவனத்தின் புதிய கருவியான எம்ஐ4ஐ ரூ.12,999க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதன் சிறப்பம்சங்களை பொருத்த வரை 5 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே 64 பிட் குவால்காம் ஸ்னாப்டிராகன் 615 பிராசஸர் 2ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது.

கேமராவை பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி கேமரா, டூயல் டோன் ப்ளாஷ், ஹெச்டிஆர் மோடு மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு லாலிபாப் MIUI 6 மூலம் இயங்கும் இந்த கருவியில் ப்ளூடூத் 4.1, GPS/GLONASS,வை-பை டைரக்ட், யுஎஸ்பி மற்றும் 3120 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Those wanting to get their latest Xiaomi sensation, the Mi 4i, can do so on 25 and 26 May on Flipkart
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்