64ஜிபி சியோமி எம்ஐ4 ரூ.17,999 மட்டுமே..!

Posted by:

சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 22 ஆண் தேதி கால் பதித்தது. இதை அனுசரிக்கும் விதமாக அந்நிறுவனம் கடந்த இரு நாட்களாக பல சலுகைகளை அறிவித்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக நேற்று (ஜூலை 23) அந்நிறுவனம் எம்ஐ 4ஐ எனும் புதிய கருவியை வெளியிட்டது, இன்று அந்நிறுவனம் எம்ஐ 4 கருவியின் விலையை குறைத்திருக்கின்றது.

 64ஜிபி சியோமி எம்ஐ4 ரூ.17,999 மட்டுமே..!

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த அந்நிறுவனம் எம்ஐ 4 கருவியின் 64ஜிபி மாடலை ரூ.2000 தள்ளுபடி செய்து தற்சமயம் ரூ.17,999க்கு விற்பனை செய்து வருகின்றது.

சியோமி ஆண்டு விழா சிறப்பு சலுகைகள்

சியோமி இந்தியா, மற்றும் ப்ளிப்கார்ட் தளத்திலும் இந்த சலுகை தற்சமயம் வழங்கப்பட்டுள்ளது. இவை இல்லாமல் எம்ஐ 4 64ஜிபி மாடல் அமேசான் இந்தியா மற்றும் ஸ்னாப்டீல் போன்ற இணையதளங்களிலும் விற்பனை செய்யப்படுகின்றது.

விலை குறைப்போடு இல்லாமல் ப்ளிப்கார்ட் தளத்தில் எக்ஸ்சேன்ஜ் சலுகை அறிவிக்கப்பட்டு இதன் விலை ரூ.12,999 வரை விற்பனை செய்யப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
Read more about:
English summary
Xiaomi India announced that Mi 4's 64GB variant will be available for Rs 17,999 for 24 hours.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்