6 ஜிபி ரேம் கொண்ட போன் அறிமுகம்!

இணையத்தில் சில நாட்களாகக் கிசுகிசுக்கப்பட்டு வந்த புதிய கருவி அறிமுகம். அனைவரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் இந்தக் கருவியில் சக்தி வாய்ந்த அம்சங்கள் ஏராளமாய் வழங்கப்பட்டுள்ளன..

By Meganathan
|

சியோமி நிறுவனத்தின் புத்தம் புதிய ஸ்மார்ட்போன் இன்று சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சில நாட்களாகக் கிசுகிசுக்கப்பட்டு வந்த எம்ஐ நோட் 2 கருவி இன்றைய புதுவரவாக அமைந்திருக்கின்றது.

சீனாவின் ஆப்பிள் என அழைக்கப்படும் சியோமியின் புதுவரவு கருவியில் வழங்கப்பட்டுள்ள முழுமையான சிறப்பம்சங்களைப் பார்ப்போமா..

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதைப் போல் சியோமி எம்ஐ நோட் 2 கருவியில் dual-curved டிஸ்ப்ளே மற்றும் 3G கிளாஸ் பேனல் கொண்டுள்ளது. 5.7 இன்ச் OLED டிஸ்ப்ளே மற்றும் 3D கிளாஸ் வழங்கப்பட்டுள்ளது.

வடிவமைப்பு

வடிவமைப்பு

வழக்கமான வடிவமைப்பில் மாற்றம் செய்யும் விதமாக ஹோம் பட்டன் டிஸ்ப்ளேவின் கீழ் பொருத்தப்பட்டுள்ளது. எம்ஐ நோட் மற்றும் எம்ஐ நோட் ப்ரோ கருவியில் மூன்று டச் பட்டன்கள் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

சிப்செட்

சிப்செட்

குவால்காம் ஸ்னாப்டிராகன் 821 பிராசஸர் மற்றும் 6 ஜிபி LPDDR4 ரேம் மற்ரும் 128 ஜிபி இன்டர்னல் மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. இதோடு இல்லாமல், 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் மெமரி கொண்ட மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கேமரா

கேமரா

அழகிய புகைப்படங்களை எடுக்க ஏதுவாகச் சியோமி எம்ஐ நோட் 2 கருவியில் 22.5 எம்பி பிரைமரி கேமரா மற்றும் சோனி IMX318 சென்சார், f/2.0 அப்ரேச்சர், மற்றும் துல்லியமான படங்களை வழங்க PDAF, EIS வழங்கப்பட்டுள்ளன. செல்பீ எடுக்க 8 எம்பி ஆட்டோஃபோகஸ் கேமரா மற்றும் சோனி Exmor IMX268 சென்சார் மற்றும் f/2.0 அப்ரேச்சர் கொடுக்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

மற்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களைப் பொருத்த வரை என்எஃப்சி, எச்டி ஆடியோ மற்றும் ஜிபிஎஸ் போன்றவை வழங்கப்பட்டுள்ளன. ஆண்ட்ராய்டு சார்ந்த MIUI8 இயங்குதளம் கொண்டிருக்கும் எம்ஐ நோட் 2 4ஜி எல்டிஇ மற்றும் 4070 எம்ஏஎச் பேட்டரி மற்றும் குவிக் சார்ஜ் 3.0 அம்சமும் கொண்டுள்ளது.

விலை

விலை

சியோமி எம்ஐ நோட் 2 விலையைப் பொருத்த வரை 4ஜிபி ரோம் +32 ஜிபி மெமரி கொண்ட கருவி இந்திய மதிப்பில் ரூ.27,600 என்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட கருவி ரூ.32,500 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கருவியின் இந்திய வரவு குறித்து எவ்வித தகவலும் இல்லை.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Xiaomi launches its first 6GB RAM smartphone

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X