விற்பனையில் புதிய சாதனை : சியோமி அறிவிப்பு!

இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் புதிய சாதனைப் படைத்திருப்பதாக சியோமி நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்..

By Meganathan
|

ஸ்மார்ட்போன்களுக்கு அவசியமான அம்சங்கள் மற்றும் சரியான விலையில் அவற்றை விற்பனை செய்து சியோமி நிறுவனம் இந்தியாவில் வளர்ந்து வருகின்றது. 2014 ஆம் ஆண்டு இந்திய சந்தையில் கால் பதித்த சியோமி நிறுவனம் பிளாஷ் விற்பனை மூலம் நொடிகளில் கருவிகளை விற்பனை செய்தது. அப்படியாக அந்நிறுவனம் விற்பனையில் புதிய சாதனை ஒன்றைப் படைத்திருப்பதாக அந்நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி செய்திக் குறிப்பின் மூலம் தெரிவித்துள்ளார்.

புதிய சாதனை

புதிய சாதனை

அவ்வாறாக சியோமி நிறுவனம் 18 நாட்களில் சுமார் 1 மில்லியன் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் மட்டும் விற்பனை செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கடிதம்

கடிதம்

சியோமி விற்பனையில் சாதனை படைத்திருப்பதையொட்டி அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சியோமி பயனர்கள், நிறுவனத்தினை துணை தலைவர், மற்றும் இந்திய தலைமை அதிகாரி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிக்கும் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரெட்மி நோட் 3

ரெட்மி நோட் 3

ஏற்கனவே சியோமி நிறுவனம் ஆறு மாதங்களில் சுமார் 2.3 மில்லியன் ரெட்மி நோட் 3 கருவிகளை விற்பனை செய்து சாதனை படைத்ததும் குறிப்பிடத்தக்கது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேக் இன் இந்தியா

மேக் இன் இந்தியா

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்திலேயே சியோமி நிறுவனம் 'மேக் இன் இந்தியா' திட்டத்தில் கலந்து கொண்டது. இதனைத் தொடர்ந்து இந்நிறுவனம் இந்தியாவின் மிகப் பெரிய ஸ்மார்ட்போன் பிரான்டாக உருவெடுத்துள்ளதாக ஐடிசி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடம்

இடம்

சர்வதேச சந்தையில் முக்கிய இடம் வகிக்க சியோமி நிறுவனத்தைப் பொருத்த வரை இந்திய சந்தை மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. சியோமி குடும்பத்தின் ஒட்டு மொத்த முயற்சியில் இந்திய சந்தையில் அதிகப்படியான பங்குகளை 3-5 ஆண்டுகளில் கைப்பற்ற முடியும் என சியோமி சிஇஒ தனது கடிதத்தின் மூலம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

அறிமுகம்

அறிமுகம்

இந்திய சந்தையில் சியோமி நிறுவனம் ஜூலை 2014 ஆம் ஆண்டு களம் இறங்கியது. இந்நிறுவனத்தின் முதல் இந்திய வெளியீடாக சியோமி எம்ஐ 3 அமைந்தது. இந்தக் கருவியானது பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக பிளாஷ் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

ஒரே வருடத்தில் சியோமி நிறுவனம் தனது சொந்த இணையத்தளம், ஆப் மற்றும் அமேசான், ஸ்னாப்டீல் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. இத்துடன் தி மொபைல் ஸ்டோர் மற்றும் ஏர்டெல் ஸ்டோர் உள்ளிட்டவற்றில் தனது ஆஃப்லைன் விற்பனையைத் தொடங்கியது.

வெளியீடு

வெளியீடு

சியோமி நிறுவனம் எம்ஐ 4ஐ கருவியினை பிரத்தியேகமாக இந்திய பயனர்களுக்கென வடிவமைத்து ஏப்ரல், 2015 ஆம் ஆண்டு வெளியிட்டது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Xiaomi India Claims to Have Sold 1 Million Smartphones in 18 Days

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X