தீபாவளி சலுகை : சியோமி கருவிகள் ரூ.1/- க்கு விற்பனை!

Written By:

அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் தளங்களைத் தொடர்ந்து சியோமி நிறுவனமும் தீபாவளி விற்பனை திருவிழா ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 17 முதல் அக்டோபர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் விற்பனை திருவிழாவில் அந்நிறுவனம் பல்வேறு சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடியினை வழங்கும் எனத் தெரிவித்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

கூப்பன்

விற்பனை திருவிழாவில் சில கருவிகளின் அறிமுகம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இத்துடன் பயனர்கள் கோ ஸ்மாஷ் விளையாடி சலுகை கூப்பன்களும் வழங்கப்படுகின்றது. அக்டோபர் 17 முதல் 19 ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை பயனர்கள் ரூ.100 முதல் ரூ.500 வரை கூப்பன்களையும் வெல்ல முடியும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சலுகை

மேலும் தேர்வு செய்யப்பட்ட கருவிகள் ரூ.1க்கு வழங்கப்படும் என்றும் இவை பிளாஷ் விற்பனை முறையில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேதி

பிளாஷ் விற்பனையானது அக்டோபர் 17 முதல் அக்டோபர் 19 ஆம் தேதி வரை தினமும் மதியம் 2 மணிக்குத் துவங்கும், இதில் ரெட்மி 3எஸ் பிரைம், எம்ஐ ப்ளூடூத் ஸ்பீக்கர், ரெட்மி நோட் 3, பவர் பேங்க், எம்ஐ 4 மற்றும் எம்ஐ பேண்ட் 2 போன்ற கருவிகளை பயனர்கள் ரூ.1 மட்டும் செலுத்தி வாங்கிட முடியும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

தள்ளுபடி

எம்ஐ லாப்டாப் ஸ்டிக்கர் ஒன்றும் எம்ஐ கீ செயின் ஒன்றும் வழங்கப்படுகின்றது. மேலும் எம்ஐ யுஎஸ்பி ஃபேன் ஒன்றும் வழங்கப்படுகின்றது. எம்ஐ ப்ரோடெக்ட் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் ரூ.300க்கு வழங்கப்படுகின்றது. இத்துடன் எம்ஐ 5 கருவியினை தவனை முறையில் வாங்கும் போது 0% வட்டி முறை வழங்கப்படுகின்றது.

அறிமுகம்

புதிய கருவிகளின் அறிமுகத்தைத் தொடர்ந்து எம்ஐ மேக்ஸ் கருவியினை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தக் கருவியில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 652 சிப்செட், 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் மெமரியும் வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்


முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்Read more about:
English summary
Xiaomi Diwali sale offers devices at just Rs 1
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்