சியாமி நிறுவனம் தரும் புதிய வசதி. இனி ரயில் பயண விபரங்களையும் பார்க்கலாம்

ரயில் டிக்கெட் மெசேஜ் வேண்டுமா? சியாமி நிறுவனம் கைகொடுக்கின்றது

சியாமி நிறுவனத்தின் ஒவ்வொரு தயாரிப்புக்கும் இந்தியாவில் மாபெரும் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் கடந்த வாரம் இந்நிறுவனம் ரெட்மி 4A என்ற புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இதுமட்டுமின்றி சியாமி நிறுவனம் புதிய எஸ்,எம்.எஸ் அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இந்த வசதி இனிவரும் MIUI அப்டேட்டில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சியாமி நிறுவனம் தரும் புதிய வசதி. இனி ரயில் பயண விபரங்களையும் பார்க்கல

இந்த எஸ்,எம்.எஸ் அறிவிப்பு என்ன என்பதை அறிய ஆவலுடன் இருக்கும் இந்தியர்களுக்கு தெரிவிப்பது என்னவெனில் இதுவொரு IRCTC ரயில் புக்கிங் அறிவிப்பு என்பதே ஆகும். ரயிலில் முன்பதிவு செய்திருக்கும் பயணிகள் அனைவருக்கும் இந்த எஸ்,எம்.எஸ் அறிவிப்பு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை

IRCTC ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்தவர்களுக்கு அவர்களுடைய பயணம் குறித்த தகவல்கள் டெக்ஸ்ட் மெசேஜ் ஆக வருவது வழக்கம். இனி சியாமி நிறுவனமே இந்த டெக்ஸ்ட் மெசேஜை பெற்று அனுப்புகிறது. இதில் பி.என்.ஆர் ஸ்டேட்டஸ், ரயில் நம்பர், ரயில் புறப்படும் இடம் மட்டும் நேரம், ரயில் சென்றடையும் இடம் மற்றும் நேரம் ஆகியவை அந்த எஸ்,எம்.எஸ் -இல் இருக்கும் என்பதே இதன் சிறப்பு

சியாமி நிறுவனம் தரும் புதிய வசதி. இனி ரயில் பயண விபரங்களையும் பார்க்கல

இந்த புதிய வசதி MIUI அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனில் மட்டும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வசதியில் ரயில் பயணத்தின் முழு விபரங்களுடன் கூடிய இமேஜ் ஒன்றும் பயணிகளுக்கு மெசேஜ் ஆக வரும்.

கூகுள் மேப்ஸ் மூலம் லோக்கேஷன் ஷேர் செய்வது எப்படி.?

இந்த மெசேஜ்-ஐ பயணிகள் டிக்கெட் போன்று உபயோகித்து கொள்ளலாம். சியாமி நிறுவனம் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு செய்து கொடுக்கும் இந்த புதிய வசதியை ரயில் பயணிகள் அனைவரும் பயன்படுத்தி பயன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்கட்டமாக டெக்ஸ்ட் மெசேஜை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரவும், இமேஜ் மெசேஜை ஒருசில கால இடைவெளியில் கொண்டு வரவும் சியாமி நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
Xiaomi announces a new IRCTC booking status feature
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்