பட்டையைக் கிளப்பும் அதிபயங்கர துப்பாக்கிகள்!

Written By:

திரைப்படங்களில் எதிரிகளை துவம்சம் செய்யச் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்துவதை போல் துப்பாக்கிகள் காண்பிக்கப்படுகின்றன. உலகின் ஆபத்தான ஆயுதங்களாக இருப்பதோடு பழமை வாய்ந்த ஒன்றாகவும் இருக்கின்றது.

நீண்ட கால பயன்பாடுகளில் அதிகளவு மாற்றங்கள், பல்வேறு பயன் மற்றும் புது புதுத் தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது. அந்த வகையில் உலகின் மிகவும் அதிநவீன மற்றும் அதிபயங்கர துப்பாக்கி வகைகளை ஸ்லைடர்களில் பாருங்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

யுஸி துணை இயந்திரத் துப்பாக்கி (Uzi Sub-Machine Gun)

வழக்கமான இயந்திரத் துப்பாக்கிகளை விட சிறியதாக இருக்கும் படி வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தத் துணை இயந்திரத் துப்பாக்கி உலகின் அதிபயங்கர துப்பாக்கி வகைகளில் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.

எம்1911 பிரவுணிங் பிஸ்டல் (M1911 Browning Pistol)

சிறிய வகை கை துப்பாக்கி போல் காட்சியளிக்கும் எம்1911 பிஸ்டல் தேடப்படும் குற்றவாளிகளின் மத்தியில் அதிக பிரபலமானதாகும். நம் அனைவருக்கும் அறிந்த ஏகே 47 ரகத் துப்பாக்கி போல் இது நிழல் உலக தாதாக்களிடம் நன்கு அறிமுகமானதாகும்.

ஹெக்ளர் மற்றும் கோச் எம்ஜி4 (Heckler and Koch MG4)

இன்று ஏகே-47 ரகத் துப்பாக்கிகள் பிரபலமானதாக இருக்கின்றது, ஆனால் எச்கே எம்ஜி4 அதற்கும் மேலானதாகும். உலகில் தயாரிக்கப்பட்டதில் மிகவும் அபாயகரமான துப்பாக்கியாக இது அறியப்படுகின்றது.

கலாஷ்நிகௌ ஏகே-47 (Kalashnikov AK-47)

உலகெங்கும் அறியப்பட்டும் மகிவும் அதிபயங்கர ரகத் துப்பாக்கி தான் ஏகே-47. இதன் விரிவாக்கம் ஆட்டோமேட் கலாஷ்நிகௌ ஆகும். இந்தத் துப்பாக்கி மூலம் பல உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. தீவிரவாதிகள் இந்த ரகத் துப்பாக்கிகளை அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

கிளாக் 45 கேலிபர் ஜிஏபி (Glock .45 Caliber G.A.P)

ராணுவ பயன்பாடுகளில் இரண்டாம் தர இயந்திரத் துப்பாக்கி இல்லா நேரங்களில் இந்த ரக கை துப்பாக்கி பக்க துணையாகச் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைந்த எடை மற்றும் எளிய வடிவமைப்பு இந்தத் துப்பாக்கியின் சிறப்பம்சங்களில் ஒன்றாக இருக்கின்றது.

ஹெக்ளர் மற்றும் கோச் எச்கே 415 ஏ5 அசால்ட் ரைஃபிள் (Heckler and Koch HK416 A5 Assault Rifle)

முந்தைய மாடல்களை விட அதிநவீன தொழில்நுட்பங்கள் இதனைத் தலைசிறந்த துப்பாக்கியாக வெளிப்படுத்தியுள்ளது. அனைத்து வித வானிலைகளிலும் பயன்படுத்தும் படி வடிவமைக்கப்பட்டுள்ளதால், கையுறைகளை அணிந்தும் பயன்படுத்த முடியும்.

டெசர்ட் ஈகிள் பிஸ்டல் (Dessert Eagle Pistol)

உற்றுப் பார்த்தால் கழுகு போல் காட்சியளிப்பதால் இந்தத் துப்பாக்கி இப்பெயர் பெற்றுள்ளது. உலகின் அதிபயங்கர கை துப்பாக்கிகளில் ஒன்றாக விளங்கும் இதனைப் பயன்படுத்துவது சற்றே கடினமான காரியம் ஆகும்.

ஸ்மித் மற்றும் வெஸ்ஸன் ரிவால்வர் (Smith & Wesson Revolver)

மேற்கத்திய நாடுகளில் வசித்த கௌபாய் இனத்தவர் பெரும்பாலும் பயன்படுத்திய துப்பாக்கி வகையாக ரிவால்வர் இருக்கின்றது. உலகின் சக்திவாய்ந்த கை துப்பாக்கிளில் ஸ்மித் மற்றும் வெஸ்ஸன் ரிவால்வர் வகைகள் மிகவும் பிரபலமானதாகும்.

அக்யூரஸி இன்டரப்நேஷனல் ஏஎஸ்50 ஸ்னைப்பர் ரைஃபிள் ( Accuracy International AS50 Sniper Rifle)

1.6 நொடிகளில் சுமார் 5 ரவுண்டுகளை சுடும் திறன் கொண்ட ஸ்னைப்பர் இது என்பதோடு இவை பேய்த் தனமான துப்பாக்கி என்றும் அழைக்கப்படுகின்றன. இன்றைய போர் முறைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துப்பாக்கிகளாக ஏஎஸ்50 ஸ்னைப்பர் வகைகள் இருக்கின்றன.

தி டிராக்கிங் பாயிண்ட் ரைஃபிள் (The Tracking Point Rifle)

பூமி கிரகத்தில் பயன்படுத்தப்படுவதில் மிகவும் ஆபத்தான துப்பாக்கி தி டிராக்கிங் பாயிண்ட் ரைஃபிள் ஆகும். பல்வேறு தொழில்முறை மேம்பாடு மற்றும் பயன்களுக்கு ஏற்ற வளர்ச்சி போன்றவை உலகின் தலைசிறந்த துப்பாக்கி என்ற பெருமைக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
World’s Most Advanced Hi tech Dangerous Guns Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்