மூன்று மணி நேரத்தில் முழுமையான வீடு, அசத்தும் 3டி ப்ரின்டர்..!!

Posted by:

'வீட்டை கட்டி பார், கல்யாணத்தை நடத்தி பார்' என பழமொழி சொல்வார்கள். அதை எளிதாக நினைவாக்கும் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது. சுமாராக வீடு ஒன்றை கட்ட குறைந்த பட்சம் நாற்பது நாட்களேனும் ஆகும், அது போன வாரம் இப்போலாம் ஒரு படம் பார்க்கும் நேரத்தில் வீட்டை கட்டி விட முடியும் என்கின்றது 'பிக் டெல்டா', ஷாக் ஆகாமல் இது எப்படி சாத்தியம் என்பதை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்...

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஐநா

ஐக்கிய நாடுகளின் சமீபத்திய அறிக்கையில் உலகில் அடுத்த 15 ஆண்டுகளுக்கு தினசரி அடிப்படையில் சுமார் 100,000 வீடுகள் தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இத்தாலி

இத்தாலி நாட்டை சேர்ந்த பொறியியல் நிறுவனமான WSAP அனைத்து வடிவங்களிலும் 3டி ப்ரின்டர்களை தயாரித்து வருகின்றது.

3டி ப்ரின்டர்

இந்நிறுவனம் 40 அடி உயரமுள்ள 3டி ப்ரின்டர் ஒன்றை உருவாக்கியுள்ளது. இது தான் உலகின் மிக பெரிய ப்ரின்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செலவு

குறைந்த செலவில் சில மணி நேரங்களில் இந்த 3டி ப்ரின்டர் முழு வீட்டை கட்டி முடிக்கும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.

மின்சாரம்

குறைந்த அளவு மின்சாரம், கொண்டு கிடைக்கும் மூல பொருட்களை வைத்து வீடு கட்டும் அளவு இதன் தொழில்நுட்பம் அமைந்துள்ளது.

சிமென்ட்

மேலும் இந்த ப்ரின்டர் சிமென்ட் கொண்டும் வீடு கட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபத்து

பேராபத்து காலங்களில் மிகவும் எளிமையாக குறைந்த நேரத்தில் இருப்பிடத்தை அமைக்க இந்த ப்ரின்டர்கள் உபயோகமானதாக இருக்கும்.

போர்

நம்ம ஊரில் நீர் எடுக்க 'போர்' போடுவதை போன்று சில இயந்திரங்களை கொண்டு வீடு கட்டும் முறை தற்சமயம் வெளிநாடுகளில் பிரபலமாக இருக்கின்றது.

எதிர்காலம்

பிக் டெல்டா தொழில்நுட்பம் தற்சமயம் ஆரம்ப காலத்தில் இருந்தாலும், எதிர்கால குடியிருப்பு தேவைகளை பூர்த்தி செய்வதில் உபயோகமாக இருக்கும் என்றே கூறப்படுகின்றது.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
World’s Largest 3D Printer Will Build Complete Houses . Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்