கூகுள், உபெர் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் சாதிக்காததை சாதித்த சிங்கப்பூர்..!

Written By:

உலகின் முதல் செல்ப்-டிரைவிங் டாக்சிகள் அறிமுகமாகி விட்டன, அதை அறிமுகம் செய்த நாடு, நீங்கள் நினைப்பது போல அமெரிக்காவோ சீனாவோ அல்ல - சிங்கப்பூர் ..!

செல்ப்-டிரைவிங் (self- driving ) எனப்படும் தானியங்கி (சுய ஓட்டுநர்) டாக்ஸி சேவையை தொடங்கிய சிங்கப்பூர் உலகின் போக்குவரத்து துறையில் புரட்சியை துவங்கிய நாடு என்ற பெருமையையும் சேர்த்தே பெறுகிறது. இதன் மூலம் தொழில்நுட்ப ஜாம்பவான்களான கூகுள் மற்றும் உபெர் ஆகிய அமெரிக்க நிறுவனங்களை பின்தள்ளியுள்ளது சிங்கப்பூரின் நுடோனோமி (nuTonomy)..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

வளர்ச்சி :

சிங்கப்பூரின் இந்த முயற்சி சிறிய அளவுடையதாக இருப்பினும் தானியங்கி கார்களின் தீவிரம் மற்றும் அது சார்ந்த போட்டி எந்த அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது என்பதை இது விளக்குகிறது.

ஆதிக்கம் :

இந்த தானியங்கி கார் துறையானது பாரம்பரியமாக உபெர் மற்றும் கூகுள் போன்ற அமெரிக்க தொழில்நுட்ப பெருநிறுவனங்கள் ஆதிக்கத்தில் இருந்தது.

நுடோனோமி :

அந்த இரண்டு தொழில்நுட்ப ஜாம்பவான்களை மிஞ்சிய சிங்கப்பூரின் நுடோனோமி ஆனது மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் இரண்டு ஆராய்ச்சியாளர்களால் நிறுவப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலவச :

இந்த இலவச தானியங்கி டாக்ஸி பரிசோதனை ஓட்டமானது சிங்கப்பூரின் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் உயிரி நிறுவனங்களின் ஆதிக்கம் நிறைந்த ஒரு வளாகத்தில் நிகழ்த்தப்பட்டுள்ளது.

இருப்பினும் :

சீன இன்டர்நெட் ஜாம்பவான் ஆன பைடு இன்க் உட்பட உலகின் மற்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் பல ஆண்டுகளாக சாலைகளில் தானியங்கி கார்கள் சோதனை நடத்தியுள்ளன, இருப்பினும் இந்த சோதனை தான் முதல் முறையாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது.

தன்னாட்சி :

பிற நிறுவனங்களும், மிக குறிப்பாக ஆல்பபெட் கூகுள் ஆனது ஏற்கனவே பொது சாலைகளில் மில்லியன் மைல் கணக்கில் தன்னாட்சி வாகனங்களை பரிசோதனை செய்துவிட்டது.

மிகப்பெரிய சவால் :

பெரும்பாலான நிறுவனங்களுக்கு தொழில்நுட்பத்தை விட கட்டுப்பாடுகள் தான் மிகப்பெரிய சவாலாக உள்ளது

உள்ளுணர்வு முடிவு :

தன்னாட்சி வாகனங்கள் பாதுகாப்பான மற்றும் மனித இயக்கிகளை விட நம்பகமானது தான் ஆனால் பலர் ஒரு மனிதனால் முடிந்த தார்மீக அல்லது உள்ளுணர்வு முடிவுகளை எடுக்கும் திறன் அவைகளுக்கு இல்லை என்ற இயந்திர அவநம்பிக்கை கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
World's first self-driving taxis debut in Singapore. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்