ரூ.999க்கு ஸ்மார்ட்போன், இந்திய நிறுவனம் அதிரடி..!!

By Meganathan
|

ஸ்மார்ட்போன் சந்தையில் தினமும் பல்வேறு புதிய கருவிகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. இந்தியா போன்ற நாடுகளில் குறைந்த விலை பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்கள் அதிகம் விற்பனையாகி வருவது அனைவரும் அறிந்த ஒன்றே..!

மீண்டும் நோக்கியா.? அதிர வைக்கும் மார்ஃப் கான்செப்ட்..!!

குறைந்த விலை கருவியை வெளியிட்டு ஏறக்னவே கல்லா கட்டிய இந்திய நிறுவனம் மீண்டும் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட திட்டமிட்டிருக்கின்றது.

மொபைல்

மொபைல்

இதற்கு முன் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.500க்கு மொபைல் போன்களை விற்பனை செய்ததை யாரும் மறந்திருக்க முடியாது. இதே போன்று அந்நிறுவனம் மீண்டும் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய மொபைல் மற்றும் டேப்ளெட் கருவிகளை தயாரிக்கும் டேட்டாவின்ட் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

விலை

விலை

இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கும் இந்த கருவியானது இந்தியாவில் ரூ.999க்கு விற்பனை செய்யப்படும் என்றும் கூறப்படுகின்றது.

டிசம்பர்

டிசம்பர்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் திருபாய் அம்பானியின் பிறந்த தினத்தை முன்னிட்டு டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி முதல் இந்த கருவிகள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இயங்குதளம்

இயங்குதளம்

லினக்ஸ் சார்ந்த இயங்குதளம் கொண்டிருக்கும் இந்த கருவியானது ஆர்காம் சேவைகளோடு வழங்கப்படலாம்.

ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன்

'எங்களது லச்சியமே ரூ.1000 பட்ஜெட்டில் ஸ்மார்ட்போன் ஒன்றை உருவாக்க வேண்டும்' என கனடாவை சேர்ந்த டேட்டாவின்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாகி சுனீத் சிங் துலி தெரிவித்துள்ளார்.

இலவசம்

இலவசம்

லினக்ஸ் இயங்குதளம் கொண்டிருக்கும் இந்த கருவியுடன் வாடிக்கையாளர்கள் ஒரு ஆண்டு முழுவதும் இலவச இண்டர்நெட் பயன்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

சிறப்பம்சம்

சிறப்பம்சம்

2ஜி சேவை கொண்ட இந்த கருவியில் மற்ற ஸ்மார்ட்போன்களை போன்றே ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், ப்ரவுசிங் சேவைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும்.

ஹார்டுவேர்

ஹார்டுவேர்

மற்றபடி ஹார்டுவேர் குறித்த தகவல்கள் ஏதும் இல்லை என்றலும் எவ்வித லினக்ஸ் இயங்குதளம் கொண்டிருக்கும் என்பதும் மர்மமாகவே உள்ளது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
World’s Cheapest Smartphone for Rs. 999. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X