உலகின் விலை குறைந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.99/- மட்டுமே.!!

Written By:

உலகின் விலை குறைந்த ஸ்மார்ட்போனினை வழங்குவதாக இந்திய சந்தையில் அறிமுகமாகியிருக்கும் புதிய நிறுவனம் தான் நமோடெல். பெங்களூரூவை சேர்ந்த இந்நிறுவனம் அக்கெடின் என்ற தனது முதல் ஸ்மார்ட்போன் கருவியினை ரூ.99க்கு வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் இது இந்தியாவிலேயே மிகவும் விலை குறைந்த கருவி என்றும் தெரிவித்துள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

1

இந்த கருவிக்கான முன்பதிவுகளை மே மாதம் 17 ஆம் தேதி முதல் மே 25 ஆம் தேதி வரை namotel.com தளத்தில் மேற்கொள்ள முடியும் என அந்நிறுவனத்தின் விளம்பர அதிகாரி மாதவ் ரெட்டி தெரிவித்திருந்தார்.

2

நமோடெல் அக்கெடின் கருவியின் சிறப்பம்சங்களை பொருத்த வரை 4 இன்ச் திரை 480*800 பிக்சல் WVGA ரெசல்யூஷன், ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1, 1ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

3

இதோடு 4ஜிபி இன்டர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும், 2எம்பி ப்ரைமரி கேமரா, விஜிஏ முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இதோடு 3ஜி மற்றும் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

4

இந்த கருவியினை வாங்க விரும்புவோர் emybanker.com தளம் சென்று தங்களுக்கான பயனர் குறியீடு மற்றும் கடவுச்சொல் பெற்று அதனினை கொண்டு namotel.com தளத்தில் கருவியினை முன்பதிவு செய்திட முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5

எனினும் இந்நிறுவனம் தெரிவித்திருந்த namotel.com மற்றும் emybanker.com இணையதளங்கள் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

6

இந்த தளங்களில் முன்பதிவு செய்வதற்கு வாடிக்கையாளர்கள் ரூ.199 என்ற வாழ்நாள் சந்தா செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7

இந்நிறுவனத்தின் இணையதளத்தில் இந்த கருவியின் விலை ரூ.2,999 என்றும் விசேஷ சலுகையில் இதன் விலை ரூ.99 என்றும் இதனினை பயனர்கள் கேஷ் ஆன் டெலிவரி எனப்படும் வீட்டில் கருவியை வாங்கியதும் பணம் அளிக்க முடியும், விநியோகம் செய்ய கட்டணங்கள் பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

8

இந்தியாவில் ஆதார் அட்டை பெற்றிருக்கும் அனைத்து மக்களும் இந்த கருவியை வாங்க முடியும் என்றும் இந்த கருவி மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஆதரவளிக்கும் விதமாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

9

மேலும் இந்நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள புகைப்படங்கள் காட்சி நோக்கிற்காக பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், எந்நேரத்திலும் இவை மாற்றப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

10

முன்னதாக ஃப்ரீடம் 251 என்ற நிறுவனம் விலை குறைந்த ஸ்மார்ட்போன்களை வழங்குவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

12

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
World’s cheapest smartphone launched at Rs 99. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்