மகளிர் தின விசேஷம் : பெண்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை.!!

Written By:

ஸ்மார்ட்போன் கருவிகளில் ஆப் எனும் செயலி மூலம் மருத்துவம் சார்ந்த சேவைகளை வழங்கி வரும் நிறுவனம் தான் பிராக்டோ. செயலி மூலம் அனைத்து வித நோய்களுக்கும் மருத்துவர்களை கண்டறிவது, மருத்துவர்களை சந்திக்க அனுமதி கோருவது உள்ளிட்டவைகளை மேற்கொள்ள முடியும். இணையதளம், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் பிராக்டோ சேவையை பயன்படுத்த முடியும்.

மகளிர் தின விசேஷம் : பெண்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை.!!

அந்த வகையில் மார்ச் 8, மகளிர் தினத்தையொட்டி பிராக்டோ விசேஷ சலுகைகளை அறிவித்துள்ளது. அதன் படி பிராக்டோ மூலம் இந்தியா பெண்கள் அனைவரும் இலவசமாக மருத்துவ ஆலோசனையை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் தின விசேஷம் : பெண்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை.!!

மன உளைச்சல் காரணமாக உடல் ரீதியான நோயர்களுக்கு ஆண்களை விட பெண்கள் அதிகளவு பாதிக்ப்படுவதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பிராக்டோவின் இந்த சலுகையின் மூலம் பெண்கள் தங்களது அனைத்து சந்தேகங்களையும் மருத்துவர்களிடம் கேட்கலாம். மேலும் தங்களது குடும்பத்தினருக்கும் சேர்த்து சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம் என பிராக்டோ தெரிவித்துள்ளது.

 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Women's Day Practo to offer free consultation for all women across India Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்