பரிதாபம் : "துப்பாக்கி தருகிறோம், என் நாயை சுட்டு கொல்லுங்கள்..!"

Posted by:

"என் நாயை சுட்டுக் கொல்ல யாரேனும் இங்கு வாருங்கள். இங்கே இருக்கும் யாருக்கும் என் நாயை சுட்டுக் கொல்ல மனம் இல்லை. நாங்கள் துப்பாக்கி தருகிறோம்..!" இப்படி ஒரு ஃபேஸ்புக் பதிவை செய்து இருக்கிறார் அமெரிக்காவின் டெக்ஸஸ் நகரை சேர்ந்த பெண் ஒருவர்..!

ஃபேஸ்புக் : உங்கள் காதல் 'நிலைக்க' நீங்கள் செய்ய வேண்டியது..!

பரிதாபம் :

இந்த ஃபேஸ்புக் போஸ்ட் பற்றி அறிந்து கொண்ட அமெரிக்க விளங்கு கட்டுபாடு அலுவலர்கள் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று விசாரணை செய்ததில், தன்னால் அந்த நாயை பார்த்துக் கொள்ள முடியவில்லை என்றும், அந்த நாய் குப்பை தொட்டியில் இருந்து தான் எங்களுக்கு கிடைத்தது, அதனால் தான் அதை கொல்ல நினைக்கிறேன் என்றும் விளக்கம் கூறியுள்ளார் அந்த பெண்.

15 வருட வலி : பிரிந்து போன தாய் - மகனை சேர்த்த ஃபேஸ்புக் போஸ்ட்..!

பரிதாபம் :

அதனை தொடர்ந்து புல்டாக் கலப்பு (Bulldog Mix) இனத்தை சேர்ந்த 3 வயது நிரம்பிய சின்னாமோன் (Cinnamon) என்று பெயர் கொண்ட அந்த நாய், அந்த பெண்ணிடம் இருந்து பாதுகாக்கப்பட்டது. சின்னாமோனை யாரேனும் தத்தெடுத்துக் கொள்ளும் வரை, அது நாய்கள் வளர்ப்பு குடும்பம் ஒன்றில் பாதுகாக்கப்பட இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Check out here about A Woman to Facebook friends to Come and shoot my dog. Read more about this in Tamil Gizbot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்