50 மில்லியன் பதிவிறக்கங்களை கடந்தது விண்டோஸ் 10

By Meganathan
|

ஜூலை 29 ஆம் தேதி வெளியான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 10 இயங்குதளம் தொடர்ச்சியாக அப்டேட்களை வழங்கி வருகின்றது. அதன்படி மூன்றாவது அப்டேட் குமுலேட்டிவ் முறையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் மூலம் பயனாளிகள் முந்தைய விண்டோஸ் அப்டேட்களை செய்யவில்லை என்றாலும் புதிய அப்டேட் பெற முடியும்.

டிரைவர்லெஸ் கார் : கூகுள் நம்மை ஏமாற்றுகின்றதா..?

 50 மில்லியன் பதிவிறக்கங்களை கடந்தது விண்டோஸ் 10

புதிய அப்டேட் மூலம் ஸ்டோர் இயங்காமல் இருந்த பிரச்சனை நீக்கப்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய விண்டோஸ் 10 வெர்ஷனில் வாடிக்கையாளர்கள் ஸ்டோரினை பயன்படுத்த முடியாத நிலையில் இருந்ததால், புதிய செயலிகளை பதிவிறக்கம் செய்ய முடியாமல் இருந்ததோடு, மெயில் மற்றும் கேலண்டர் போன்றவைகளும் வேலை செய்யாமல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் வரலாறு : ஒரு பார்வை..!

மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 புதிய அப்டேட் மூலம் முன்பு இருந்த அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு உலகளவில் தற்சமயம் வரை சுமார் 50 மில்லியன் கருவிகளில் விண்டோஸ் 10 பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு வரை 25 மில்லியனாக இருந்து ஏழே நாட்களில் 25 மில்லியன் அதிகரித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
Microsoft has adopted a new mechanism to roll out updates since the launch of Windows 10 that was released on July 29.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X