Just In
- 6 min ago ரூ.8000 கம்மி.. அசல் விலையில் இருந்து.. அடிமாடு ரேஞ்சுக்கு இறங்கிய லேட்டஸ்ட் Oppo போன்.. என்ன மாடல்?
- 2 hrs ago இனி App-களை மறைக்கலாம்.. சிரிச்சுகிட்டே சம்பவம் செஞ்ச சுந்தர்.. வந்தாச்சு Android 15.. இது Google-ன் டர்ன்!
- 4 hrs ago Jio மரண மாஸ்.. ரூ.200 விலை தினமும் 3GB டேட்டா.. இலவசமாக 2GB டேட்டா.. அன்லிமிடெட்டாக 5G டேட்டா.. எந்த திட்டம்?
- 5 hrs ago கேம் விளையாடிய Modi.. இந்தியாவின் முக்கிய கேமர்களுடன் ரவுண்ட்டேபிள் மீட்டிங்.. இனி ஆட்டம் வேற மாதிரி இருக்கும்
Don't Miss
- Lifestyle கொத்து கொத்தா முடி கொட்டுறத நிறுத்தி முடியை வலிமையா வளர்க்கணுமா? கேரட்டை இப்படி யூஸ் பண்ணுங்க...!
- Movies குழந்தை இல்லையானு கேட்டு டார்ச்சர் பண்றாங்க.. கடுப்பான சாந்தினி தமிழரசன்!
- News சென்னையில் 400 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்.. தேர்தல் பறக்கும் படை அதிரடி.. பரபர தகவல்
- Finance நீங்க பங்குச்சந்தையில் முதலீடு செய்பவரா..? கையில் வெண்ணெயை வைத்துக் நெய்க்கு அலைய வேண்டாம்..!!
- Sports சிஎஸ்கே அணியின் கேப்டன் ரோஹித் சர்மா.. ருதுராஜ் டம்மி தான்.. முன்னாள் இங்கிலாந்து வீரர் அதிரடி
- Automobiles இது கேரளா எல்லாம் இல்ல! தமிழ்நாட்டுல இது எந்த இடம் தெரியுமா? வைரலாகும் புது வீடியோ!
- Education தலித் முன்னேற்றத்துக்காக குரல் கொடுத்த அம்பேத்கர்..!!
- Travel 'சிரட்டைக் கின்னரி' இருக்கும் குடைவரை கோவில் எங்கு உள்ளது தெரியும்?
20 நிமிடங்களில் சென்னை டூ பெங்களூர் : இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு.?
ஹைப்பர்லூப் நடைமுறைக்கு வந்த பின்னர் 20 நிமிடங்களில் சென்னை டூ பெங்களூர் பயணிக்கலாம் என்ற தகவல் உங்களுக்குள் "இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு.?" என்ற கேள்வியை எழுப்பலாம்.
"நீங்க என்ன சொன்னாலும், அதை கண்ண மூடிக்கிட்டு நம்ப நாங்கலாம் என்ன முட்டளுங்களா.?? எப்போ பாரு.. அண்டப்புளுக ஆகாசப்புளுக விடுறதே உனக்கு வேலையா போச்சு" என்ற உங்களின் விமர்சனங்கள் மிக நியாமானவைகள் தான். அதற்காக உண்மையை நூறு முறை பொய் என்று சொல்வதால் அது பொய் ஆகிடுமோ.?? ஆகாது அல்லவா.??
அப்படியாக ஹைப்பர்லூப் நடைமுறைக்கு வந்த பின்னர் 20 நிமிடங்களில் சென்னை டூ பெங்களூர் பயணிக்கலாம் என்ற தகவல் உங்களுக்குள் "இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு.?" என்ற கேள்வியை எழுப்பலாம். அந்த கேள்விக்கு பதில் இதோ.!
ஹைப்பர்லூப் யோசனை
ஹைப்பர்லூப் (Hyperloop) என்பது மணிக்கு சுமார் 700-க்கும் மேற்பட்ட மைல் வேகத்தில், காப்ஸ்யூல்கள் போன்ற வடிவத்தை கொண்ட ஒரு குழாய் போக்குவரத்து அமைப்பாகும். 2013 ஆம் ஆண்டு, டெஸ்லா (Tesla) மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலன் மஸ்க் (Elan Musk) முதன்முதலில் ஹைப்பர்லூப் யோசனையை வெளிப்படுத்தினார்..!
அனைத்து வகையான போக்குவரத்து
கண்ணை மூடி கண்ணை திறப்பதற்குள் நீங்கள் சேர வேண்டிய இடத்திற்கு உங்களை கொண்டு சென்று சேர்த்து விடும் வல்லமை கொண்ட ஹைப்பர்லூப் எப்படி அனைத்து வகையான போக்குவரத்து அம்சங்களிலும் வருங்கால புரட்சியை ஏற்படுத்த போகிறது என்பதை நிரூபிக்கும் நான்கு ஹைப்பர்லூப் சமாசாரங்களை தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!
ஹைப்பர்லூப் புரட்சி #1 :
நவீனகால போக்குவரத்தில் அதிக அணுகலையும் அதிக திறனையும் கொண்டுள்ளதாய் இருக்கும்..!
செயல்படும் :
நகரின் மையத்தில் சுரங்கப்பாதை மூலம் விமான வேகத்தில் மக்களை பயணிக்க செய்ய முடியும். இதனால் இது அதிக மக்களால் அணுகப்படும் உடன் மிகத்திறமையாக செயல்படும் என்பதிலும் சந்தேகமே இல்லை.
வாய்ப்பே இல்லை :
ஹைப்பர்லூப் ஆனது ஒரு கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் மற்றும் முற்றிலும் தன்னாட்சியாய் இயங்க கூடியது ஆகையால் வானிலை அல்லது பிற ஆப்ரேட்டிங் பிழை காரணமாக போக்குவரத்து தாமதம் ஏற்பட வாய்ப்பே இல்லை.
ஹைப்பர்லூப் புரட்சி #2 :
டிக்கெட் கவுன்டர்கள், வரிசைகள் முற்றிலுமாக காணமல் போகும்..!
பிரச்சனை :
ஹைப்பர் லூப் உருவாக்கும் நிறுவனம் ஒரு நெறிப்படுத்தப்பட்ட டிக்கெட் முறை அறிமுகப்படுத்த விரும்புகிறது. அதனால் டிக்கெட் கவுன்டர்கள் வரிசை போன்ற பிரச்சனைகளே இருக்காது.
ஹைப்பர்லூப் புரட்சி #3 :
கற்பனை செய்வதை விட அதன் இருக்கைகள் மிக வசதியாக இருக்கும்..!
இடவசதி :
ஹைப்பர்லூப் நிறுவனம் அதன் இருக்கைகளை வசதியாக மட்டுமின்றி பயணிகளை மக்கள் எல்லா நேரங்களிலும் அவர்கள் தங்கள் சாமான்களை வைக்க போதுமான விசாலமான இடவசதியை வடிவமைக்கும் முனைப்பிலும் உள்ளது.
ஹைப்பர்லூப் புரட்சி #4 :
அனைவரும் பயன்படுத்தும் வகையில் மலிவாக இருக்கும்..!
வடிவமைப்பு :
ஹைப்பர்லூப் சௌகரியமான மற்றும் வசதியான ஒன்றாக இருப்பது மட்டுமின்றி அனைவரும் அணுகும் வண்ணம் மிக மிக மலிவாக இருக்க வேண்டும் என்பதிலும் வடிவமைப்பு நிறுவனம் முனைப்பாக செயல்படுகிறது..!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470