எப்போதும் அமெரிக்க அதிபரை பின்தொடரும் அந்த கருப்பு சூட்கேஸுக்குள் என்ன இருக்கிறது.?

அதிபரின் எம்ர்ஜென்சி தோள் பை (President's emergency satchel) என பல பெயர்கள் உண்டு..!

|

'ஃபுட்பால்' (Footbaal) என்று பொதுவாக அழைக்கப்படும் இந்த கருப்பு பெட்டிக்கு - அட்டாமிக் ஃபுட்பால் (Atomic Football), தி பட்டன் (the Button), தி பிளாக் பாக்ஸ் (The Black Box), அதிபரின் எம்ர்ஜென்சி தோள் பை (President's emergency satchel) என பல பெயர்கள் உண்டு..!

<strong>நோக்கியா ஸ்பெஷல் - நோக்கியா பற்றி உங்களுக்கு தெரியாதது </strong>நோக்கியா ஸ்பெஷல் - நோக்கியா பற்றி உங்களுக்கு தெரியாதது

இந்த பெட்டியானது அமெரிக்க அதிபர் எங்கு சென்றாலும் உடன் கொண்டு செல்லப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி என்னதான் அதற்குள் இருக்கிறது என்று இந்நாள் வரையிலாக தெரிய வந்த விடயங்களைத்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

அனுமதி :

அனுமதி :

இந்த கருப்பு லேதர் சூட்கேஸூக்குள் தான், அவசர நிலையில் எந்த இடத்தில் இருந்தபடியும் அணு ஆயுத தாக்குதல் நிகழ்த்த அனுமதி வழங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கட்டளை :

கட்டளை :

வெள்ளை மாளிகையில் இருக்கும் கட்டளை அறையான சுட்சுவேஷன் ரூம் (Situation Room) போன்றவைகளில் அமெரிக்க அதிபர் இல்லாத நேரத்தில் தான் இது பயன் படுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிவப்பு பட்டன் :

சிவப்பு பட்டன் :

பெரும்பாலானோர்கள் இந்த கருப்பு பைக்குள் உலகையே அணு ஆயுத தாக்குதல் மூலம் அழிக்கும் வண்ணம் ஒரு சிவப்பு பட்டன் இருக்கும் என்று நம்புகிறார்கள், ஆனால் அதில் இருப்பதோ 4 சமாச்சாரங்கள் தானாம்..!

கருப்பு புத்தகம் :

கருப்பு புத்தகம் :

அந்த பெட்டிக்குள், பதிலடி அணு ஆயுத தாக்குதல்கள் நிகழ்த்த உதவும் கருப்பு மற்றும் சிவப்பு மையினால் குறிப்புகள் எழுதப்பட்ட 75 பக்கங்கள் கொண்ட கருப்பு புத்தகம் ஒன்று இருக்குமாம்.

வகைப்படுத்தப்பட்ட இடங்கள் :

வகைப்படுத்தப்பட்ட இடங்கள் :

உடன், அமெரிக்க அதிபர் வசிக்கக்கூடிய வகைப்படுத்தப்பட்ட இடங்களின் (classified sites to shelter) பட்டியலை கொண்ட கருப்பு புத்தகம் ஒன்றும் இருக்குமாம்.

விளக்க புத்தகம் :

விளக்க புத்தகம் :

மேலும் அவசரகால அலைபரப்பு அமைப்பு (Emergency Broadcast System) எப்படி இயக்க வேண்டும் என்ற 10 பக்கங்கள் கொண்ட விளக்க புத்தகம் ஒன்றும் அந்த கருப்பு பெட்டிக்குள் இருக்குமாம்.

குறியீட்டு அட்டை :

குறியீட்டு அட்டை :

உடன், அங்கீகார குறியீடுகள் (authentication codes) கொண்ட ஒரு குறியீட்டு அட்டையும் (an index card) அந்த பெட்டிக்குள் இருக்குமாம்..!

பயிற்சி :

பயிற்சி :

இந்த கருப்பு பெட்டியை எடுத்துக்கொண்டும் செல்லும் இராணுவ உதவியாளர்கள், அவசர காலத்தில் உடனடியாக அணு ஆயுத தாக்குதல் நிகழ்த்துவது எப்படி என்று அதிபர்களுக்கு கற்றுக்கொடுக்க கூடிய அளவு பயிற்சி பெற்றவர்களாகத்தான் இருப்பார்களாம்.

எப்போதும் அதிபர் உடன் :

எப்போதும் அதிபர் உடன் :

இந்த கருப்பு பெட்டியானது, அதிபரின் வீட்டை தவிர்த்து கார், ஹெலிகாப்டர், விமானம், எலிவேட்டர் என எப்போதும் அதிபர் உடன் தான் எடுத்து செல்லப்படுமாம்..!

Best Mobiles in India

English summary
Why a mysterious black briefcase follows the US president everywhere. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X