கேமிராவிற்க்கும், ஆவிகளுக்கும் என்ன தொடர்பு..!?

அந்த புகைப்படங்கள் இன்றுவரை அமானுஷ்யத்தை பிரதிபலிக்கும் சாட்சியங்களாய் இருக்கின்றன என்பதும் தான் நிதர்சனம்..!

|

அனாலாக் ப்லிம் கேமிரா காலத்தில் இருந்து தற்போதைய ஸ்மார்ட்போன் கேமிரா வரையிலாக "பேய்கள், ஏன் கேமிராவில் மட்டும் சிக்குகின்றன..?" என்பதற்கு பல விளக்கங்கள் உள்ளன.

அவைகளில், ஆர்ப்ஸ் (Orbs) எனப்படும் கேமிரா தொழில்நுட்ப கோளாறுகள், ஸ்மார்ட்போன் கேமிராக்களின் மெதுவான இயக்கம் (முக்கியமாக இருட்டான இடங்களில்), இமேஜ் அலியசிங் (image aliasing) எனப்படும் புகைப்பட சிதைவு மற்றும் புகைப்பட தகவலை பதிவு செய்ய கேமிரா சென்சார் எடுத்துக்கொள்ளும் நேரம் ஆகியவைகள் மிகவும் முக்கியமான காரணங்கள் ஆகும்.

இருப்பினும் கருப்பு வெள்ளை புகைப்பட காலத்தில் இருந்தே சில அமானுஷ்ய புகைப்படங்களுக்கு, எந்தவொரு கேமிரா தொழில்நுட்ப கோளாறு விளக்கமோ, அறிவியல் விளக்கமோ கிடைக்க பெறவில்லை என்பதும், அந்த புகைப்படங்கள் இன்றுவரை அமானுஷ்யத்தை பிரதிபலிக்கும் சாட்சியங்களாய் இருக்கின்றன என்பதும் தான் நிதர்சனம்..!

சம்பவங்கள் :

சம்பவங்கள் :

19-ஆம் நூற்றாண்டில் இருந்தே ஆவிகள், புகை உருவங்கள், விளக்கமில்லாத பொருள்கள் புகைப்படங்களில் பதிவாகும் சம்பவங்கள் நடைப்பெற்று வருகின்றன.

வித்தியாசமான முயற்சிகள் :

வித்தியாசமான முயற்சிகள் :

1850 மற்றும் 1860-களில் புகைப்படகலைஞர்கள் கேமிரா தொழில்நுட்பத்தில் பல வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டனர் எடுத்துக்காட்டுக்கு ஸ்டீரியோஸ்கோபிக் படங்கள் ( stereoscopic images), இரட்டை வெளிப்பாடு எனப்படும் டபுள் எக்ஸ்போஷார் (double exposure) போன்றவைகள்.

போலி :

போலி :

கருப்பு வெள்ளை புகைப்பட காலம் தொடங்கி அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் கொண்ட இந்த காலம் வரை பலர் பணத்திற்காகவும், புகழ்ச்சிக்காகவும் பொய்யான பேய் புகைப்படங்ககளை உருவாக்குவதும், பின் அது போலி என்று நிரூபிக்கப்படுவதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.

ஆதாரம் இல்லை :

ஆதாரம் இல்லை :

இருப்பினும், புகைப்பட வரலாற்றில் உள்ள சில அமானுஷ்ய புகைப்படங்கள் போலி என்பதற்கு ஆதாரமே இல்லை. அவைகள், தான் அடுத்து வரும் ஸ்லைடர்களில் தொகுக்கப்பட்டுள்ளன.

லார்ட் கம்பெர்மேரி கோஸ்ட் (Lord Combermere Ghost) :

லார்ட் கம்பெர்மேரி கோஸ்ட் (Lord Combermere Ghost) :

1891-ஆம் ஆண்டு கம்பெர்மேரி நூலகத்தில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தின் இடது பக்க நாற்காலியில் மர்ம உருவம் அமர்திருப்பதை பார்க்க முடிகிறது.
புகைப்படம் : ஸைபெல் கோர்பெட்.

டாய்ஸ் ஆர் அஸ் (Toys R Us) :

டாய்ஸ் ஆர் அஸ் (Toys R Us) :

கலிபோர்னியா நகரில் உள்ள டாய்ஸ் ஆர் அஸ் என்ற பொம்மை கடையில் நடத்தப்பட்ட அமானுட விசாரணையில் (paranormal investigation) இன்ஃப்ரா ரெட் (Infra red) கேமிரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சிக்கியது தான் சுவரில் சாய்ந்து நிற்கும் மர்ம உருவம்.

 கல்லறை வெளி :

கல்லறை வெளி :

1996-ஆம் ஆண்டு பூத்தில் (Boothill) கல்லறை வெளியில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் இரண்டாவதாக தெரியும் மர்ம உருவம் பற்றிய விளக்கம் இன்றுவரை இல்லை

 இறந்து போனவள் :

இறந்து போனவள் :

இங்கிலாந்தில் உள்ள வெம் டவுன் ஹாலில் தீ விபத்து ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படதில் ஜன்னல் அருகே நிற்கும் 'அந்த' சிறுமி 1677-ஆம் ஆண்டு தீவிபத்து ஒன்றில் இறந்து போனவள் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
புகைப்படம் : டோனி ஓ'ராஹில்லி

கொர்ரொபோரீ ராக் ஆவி (Corroboree Rock Spirit) :

கொர்ரொபோரீ ராக் ஆவி (Corroboree Rock Spirit) :

1959-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் கொர்ரொபோரீ ராக் பகுதியில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில், முகத்தில் கை வைத்துக்கொண்டு நிற்கும் பெண் உருவத்திற்க்குஇன்றுவரை விளக்கமில்லை.
புகைப்படம் : ரிவெர்ன்ட் ஆர்.எஸ் ப்ளான்ஸ்

ஆவிகள் ஆராய்ச்சி சமூகம் :

ஆவிகள் ஆராய்ச்சி சமூகம் :

ஆகஸ்ட் 10, 1991 அன்று பேச்சிலர்ஸ் க்ரூவ் சிமென்ட்ரி Bachelor's Grove Cemetery என்ற ஆவிகள் ஆராய்ச்சி சமூகம் நடத்திய அமானுட விசாரணையில் சிக்கியது விளக்கம் இல்லாத இந்த பெண் உருவம்.

க்ரூப் போட்டோ :

க்ரூப் போட்டோ :

ப்லிம் புகைப்படமாய் உருவாக்கப்பட்ட பின்னரே தெரிந்தது குழு புகைப்படத்தில் இரண்டு நாட்களுக்கு முன் விமான விபத்தில் இறந்து போன ஃப்ரெட்டி ஜாக்சனும் (Freddy Jackson) இருக்கிறார் என்பது..!

பின் சீட்டில் :

பின் சீட்டில் :

தாயின் கல்லறைக்கு சென்றுவிட்டு திரும்பிய பின் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் இறந்து போன தாய் பின் சீட்டில் அமர்ந்து இருப்பது பதிவாகி உள்ளது.
புகைப்படம் : மேபில் சின்னேரி, 1959.

படி அருகே :

படி அருகே :

இங்கிலாந்தில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் படி அருகே நிற்கும் இந்த மர்ம உருவம் பற்றி விளக்கமே இல்லை. இந்த புகைப்படத்தின் ப்லிம் முதற்கொண்டு ஆய்வு செய்தும் விளக்கம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புகைப்படம் : ரெவ். ரால்ஃப் ஹார்டீ

ப்ரவுன் லேடி :

ப்ரவுன் லேடி :

இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட, தி ப்ரவுன் லேடி (The Brown Lady) என்று கூறப்படும் இந்த புகைப்படம் தான் இந்நாள்வரை மிகவும் பிரபலமான அமானுஷ்ய புகைப்படங்களில் மிகவும் முக்கியமானதாகும்.

தாத்தா :

தாத்தா :

பாட்டிக்கு பின்னால், 13 வருடங்களுக்கு முன்பு இறந்து போன தாத்தாவின் உருவம் நிற்பதை தெளிவாக காட்சிப்படுத்தும் புகைப்படம்..!
புகைப்படம் : டெனீஸ் ராசூல்

மூன்றாவது பெண் :

மூன்றாவது பெண் :

பிலிப்பைன்ஸ் நாட்டில் மணிலா என்ற இடத்தில் சாதாரணமாக எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் மூன்றாவதாக ஒரு புகை உருவம் தெரிவதை பார்க்க முடிகிறது.
புகைப்ப்படம் : ஆவிகள் ஆராய்ச்சி சமூகம்.

கதவை திறந்த ஸ்கேலிடர் :

கதவை திறந்த ஸ்கேலிடர் :

லண்டன் நகரில் உள்ள ஹாம்ப்டன் கோர்ட் மாளிகையில் கதவு ஒன்று திறக்கப்பட பாதுகாப்பு அலாரம் ஒலித்தது. காவலாளிகள் சென்று பார்த்த போது கதவு மூடி தான் இருந்தது. பின் சிசி டிவி கேமிராவை ஆராய்ந்து பார்த்ததில் ஒரு மர்ம உருவம் கதவை திறப்பது பதிவாகி இருந்தது. அந்த மர்ம உருவம் ஸ்கேலிடர் (Skeletor) என்று அழைக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

9 அடி உயர உருவம் :

9 அடி உயர உருவம் :

கிருஸ்துவ வழிபாட்டு தலம் ஒன்றின் உள்ளே எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில் விளக்க முடியாத 9 அடி உயர உருவம் நிற்கிறது.
புகைப்படம் : ரெவரான்ட் கே எஃப் லார்ட்

திகில் :

திகில் :

20-ஆம் நூற்றாண்டில் வில்லியம் ஹோப் எடுத்த மிகவும் திகிலான அமானுஷ்ய புகைப்படம்.

Best Mobiles in India

English summary
இன்றுவரை அமானுஷ்யத்தை பிரதிபலிக்கும், விளக்கம் இல்லாத புகைப்படங்கள். மேலும் படிக்க தமிழ் கிஸ்பாட்.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X