ஸ்க்ரீன்ஷார்ட் செய்வதை பிறருக்கு வாட்ஸ்ஆப் காட்டிக்கொடுக்குமா.?

இந்த வார தொடக்கத்தில் ஆன்லைன் அறிக்கையானது பல வாட்ஸ்ஆப் பயனர்களுக்கு ஒரு அதிர்ச்சி தரும் செய்தியை வழங்கியது.

|

வாட்ஸ்ஆப்பின் புதிய அம்சமானது நீங்கள் ஒருவரின் சாட்டில் ஸ்க்ரீன் ஷார்ட் நிகழ்த்தினால் அதை குறிப்பிட்ட நபருக்கு நோட்டிபிகேஷன் மூலம் தெரிவிக்கும் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதுவொரு அம்சம் என்று சிலரால் பாராட்டப்பட்டு கொண்டிருக்க மறுபக்கம் எதிர்ப்புகளும் கிளம்பிய வண்ணம் உள்ளது.

ஆனால், இந்த அம்சம் முழுக்க முழுக்க ஒரு போலியான தகவலாகும். ஆக, இதற்கு ஆதரவு அளிக்க நினைப்பதோ அல்லது எதிர்ப்பதோ - இரண்டுமே வீண் தான். இந்த வார தொடக்கத்தில் ஆன்லைன் அறிக்கையானது பல வாட்ஸ்ஆப் பயனர்களுக்கு ஒரு அதிர்ச்சி தரும் செய்தியை வழங்கியது.

ஸ்க்ரீன்ஷார்ட்

ஸ்க்ரீன்ஷார்ட்

அதாவது யாரவது ஒரு நண்பரின் வாட்ஸ்ஆப் சாட்டில் ஸ்கிரீன்ஷார்ட் எடுக்க உடனே அது குறிப்பிட்ட நண்பருக்கு நோட்டிபிகேஷன் மூலம் ஸ்க்ரீன்ஷார்ட் எடுக்கப் பட்டுள்ளதாக அறிவிக்கும் என்று கூறியது அந்த ஆன்லைன் அறிக்கை. இந்த செய்தி ஒரு நையாண்டி செய்தியாகும் ஆனால் இது காட்டுத்தீப்போல ஆன்லைன் முழுக்க பரவியது.

உறுதி

உறுதி

இதனால் குழப்பம் அடைந்த மக்கள் இந்த அம்சம் அமலுக்கு வந்துவிட்டதென்று எண்ணி தங்களின் அரட்டைகளில் ஸ்க்ரீன்ஷார்ட் தயக்கம் காட்ட தொடங்கினர். ஆனால் இதை உறுதி படுத்தும் வண்ணம் எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவலையும் வாட்ஸ்ஆப் நிறுவனமோ அல்லது வாட்ஸ்ஆப் வலைப்பூவிலோ அறிவிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம்

ஒரு சில வாரங்களுக்கு முன்பு இதேபோன்ற ஒரு அறிக்கை இன்ஸ்டாகிராம் பற்றி வெளியானது. புரளி அறிக்கை அதாவது யாரவது உங்களின் இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை ஸ்க்ரீன்ஷார்ட் எடுத்தால் உங்களுக்கு நோட்டிபிக்கேஷன் வரும் என்று போலியான செய்தி பரவியது, பின்னர் அது போலியான செய்தியென்று கண்டறியப்பட்டது.

கவலை வேண்டாம்

கவலை வேண்டாம்

எனவே, இதுபோன்ற அம்சங்கள் பற்றிய எந்தவிதமான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் இன்றி பயனர்கள் எதையும் நம்பவும் வேண்டாம் கவலைப்படவும் தேவையில்லை. தொழில்நுட்ப செய்திகளுக்கும் அறிவிப்புகளுக்கும் தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இனைந்திருங்கள்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

டெஸ்க்டாப் கம்ப்யூட்டரிலும் ஃபேஸ்புக் லைவ் வீடியோ வசதி.!

Best Mobiles in India

Read more about:
English summary
WhatsApp won’t notify others when you take screenshots of the chat. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X