நோக்கியா மற்றும் ப்ளாக்பெரியில் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியாது.!!

Written By:

ப்ளாக்பெரி வாடிக்கையாளர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியாக இருக்கும். இந்த ஆண்டின் இறுதியில் வாட்ஸ்ஆப் சேவை ப்ளாக்பெரி கருவிகளில் நிறுத்தப்பட இருக்கின்றது. ஃபேஸ்புக் சார்ந்த வாட்ஸ்ஆப் இந்த தகவலை தனது இணையதளத்தில் பதிவு செய்திருந்தது.

நோக்கியா மற்றும் ப்ளாக்பெரியில் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியாது.!!

ப்ளாக்பெரி கருவிகளோடு நோக்கியா எஸ்40, நோக்கியா சிம்பயான் எஸ்60, ஆண்ட்ராய்டு 2.1 மற்றும் 2.2, விண்டோஸ் 7.1 இயங்குதளம் போன்றவைகளிலும் வாட்ஸ்ஆப் சேவை நிறுத்தப்பட இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நோக்கியா மற்றும் ப்ளாக்பெரியில் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியாது.!!

எங்களது பயணத்தில் இந்த கருவிகள் முக்கிய பங்கு வகித்தாலும், அவை எங்களது நீடிக்கப்பட்ட சேவைகளை வழங்காததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அந்நிறுவனத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருவிகளை பயன்படுத்துவோர் புதிய கருவிகளில் வாட்ஸ்ஆப் பயன்படுத்த அந்நிறுவனம் கேட்டு கொண்டுள்ளது.

நோக்கியா மற்றும் ப்ளாக்பெரியில் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியாது.!!

'இந்த முடிவு கடினமான ஒன்று தான் என்றாலும், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை வழங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப் சேவையை தொடர்ந்து பயன்படுத்த 2016 ஆம் ஆண்டின் இறுதிக்குள் புதிய ஆண்ட்ராய்டு, ஐபோன் அல்லது விண்டோஸ் கருவியை பயன்படுத்துங்கள்' என வாட்ஸ்ஆப் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா மற்றும் ப்ளாக்பெரியில் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியாது.!!

தற்சமயம் வரை சுமார் 100 கோடி பயனாளர்களை கொண்டிருக்கும் வாட்ஸ்ஆப் சமீபத்தில் தனது 7வது பிறந்த நாளை கொண்டாடியது. உலகில் வாழும் மக்களில் ஏழு பேரில் ஒருவர் தற்சமயம் வாட்ஸ்ஆப் பயன்படுத்தி வருவதாகவும் அந்நிறுவனத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா மற்றும் ப்ளாக்பெரியில் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியாது.!!

பிப்ரவரி 2014 ஆம் ஆண்டு வாட்ஸ்ஆப் நிறுவனத்தை ஃபேஸ்புக் நிறுவனம் கைப்பற்றியது. தினமும் வாட்ஸ்ஆப் மூலம் சுமார் 420 கோடி குறுந்தகவல், 160 கோடி புகைப்படங்கள் மற்றும் 250 மில்லியன் வீடியோக்களும் பகிர்ந்து கொள்ளப்படுவதாக வாட்ஸ்ஆப் இணை நிறுவனர் ஜான் கௌம் ஃபேஸ்புக் போஸ்டில் குறிப்பிட்டுள்ளார்.

 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
WhatsApp will not work on Nokia and BlackBerry platforms Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்