வாய்ஸ் கால் வசதி கொண்ட வாட்ஸ் ஆப் படங்கள் கசிந்திருக்கின்றன

By Meganathan
|

பிப்ரவரி 2014 ஆம் ஆண்டில் வாட்ஸ்ஆப் செயளியில் வாய்ஸ கால் வசதி அறிமுகப்படுத்தப்படுபம் என்று அந்நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அன்று முதல் இன்று வரை அதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை.

வாய்ஸ் கால் வசதி கொண்ட வாட்ஸ் ஆப் படங்கள் கசிந்திருக்கின்றன

தற்சமயம் ஆன்டிராய்டு சார்ந்த இணையதளமான Androidworld.nl, வாட்ஸ் ஆப் செயளியில் வாய்ஸ் கால் வசதி இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் புதிய வசதியை சோதனை செய்யும் போது எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன்களை சலுகை விலையில் வாங்கிடுங்கள்]

புகைப்படங்களை வைத்து பார்க்கும் போது வாட்ஸ் ஆப் கான்டாக்ட்ளுக்கு தனி ஸ்கிரீனும், கால் லாக், மற்றும் ஆன்கோயிங் கால்களுக்கு தனி ஸ்கிரீனும் உள்ளது. மேலும் கான்வர்சேஷன் என்ற பக்கத்தில் வந்த மற்றும் தவற விட்ட அழைப்புகளின் பதிவுகளும் இருக்கின்றன. வெளியான புகைப்படங்களுக்கு எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் இல்லாத நிலையில் இவை எந்தளவு உண்மை என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

வாய்ஸ் கால் வசதி கொண்ட வாட்ஸ் ஆப் படங்கள் கசிந்திருக்கின்றன

இதுகுறித்து வாட்ஸ்ஆப் தலைமை நிக்வாக அதிகாரி ஜேன் கோம் கூறும் போது, வாய்ஸ் கால் வசதி அரிமுக்படுத்துவதில் சில தொழில்நுட்ப கோலாறுகளே காரணம் என்றும், இந்த தாமதம் 2015 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதம் வரை நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

[தலைச்சிறந்த ஆன்டிராய்டு லாக் ஸ்கிரீன் செயளிகளின் பட்டியல்]

வாட்ஸ்ஆப் செயளியில் வாய்ஸ் கால் வசதி அறிமுகப்படுத்தினால் வீசாட் செயளிக்கு நேரடி போட்டியாக இருக்கும், தற்சமயம் 600 மில்லியன் பயனாளிகளுடன் வாட்ஸ்ஆப் அதிகம் பயன்படுத்தப்படும் குருந்தகவல் செயளியாக இருக்கின்றது.

Best Mobiles in India

English summary
WhatsApp voice calls: Screenshots leaked online. Screenshots Claiming WhatsApp app offering calling features has rolled over the net, after a android site.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X