வாட்ஸ்ஆப் வீடியோ கால் அனைவருக்கும் அறிமுகம், நீங்க யூஸ் பண்ணீங்களா.?

ஒரு வழியாக வாட்ஸ்ஆப் வீடியோ கால் வந்து விட்டது, நீங்க வீடியோ கால் பண்ணிங்களா.?? இல்லையெனில் எப்படிச் செய்வதென இங்குப் பாருங்கள்..

Written By:

வாட்ஸ்ஆப் பயனர்களுக்கு ஓர் நற்செய்தி. இந்திய வாட்ஸ்ஆப் பயனர்கள் இந்த ஆப் கொண்டு வீடியோ கால் மேற்கொள்ள முடியும். ஃபேஸ்டைம், ஸ்கைப் போன்ற சேவைகளைப் போன்றே வாட்ஸ்ஆப்பிலும் வீடியோ கால்களும் இலவசமாக வழங்கப்படுகின்றன. எனினும் பயனர்கள் பயன்படுத்தும் டேட்டாவிற்குப் பணம் செலுத்த வேண்டும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

இயங்குதளம்

வாட்ஸ்ஆப் வீடியோ கால் அம்சமானது ஐபோன், ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் போன்களில் உலகம் முழுக்க அனைத்து நாடுகளிலும் வழங்கப்பட்டு விட்டது. இது வரை வாட்ஸ்ஆப் பீட்டா பதிப்பில் மட்டுமே இந்த அம்சம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வாய்ஸ் கால்

வாட்ஸ்ஆப் வாய்ஸ் கால் போன்றே வீடியோ கால்களையும் மேற்கொள்ள முடியும். பயனர்கள் வீடியோ கால் மேற்கொள்ள வேண்டிய காண்டாக்டினை தேர்வு செய்து கால் பட்டனை கிளிக் செய்ய வேண்டும், இங்கு வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் என இரு ஆப்ஷன்கள் கிடைக்கும். இதில் வீடியோ கால் ஆப்ஷனை கிளிக் செய்து வீடியோ கால் துவங்கலாம்.

அப்டேட்

வாட்ஸ்ஆப் வீடியோ காலிங் அம்சம் செயலியின் புதிய அப்டேட் மூலம் பயன்படுத்த முடியும். இதனால் பயனர்கள் தங்களது வாட்ஸ்ஆப்பினை உடனே அப்டேட் செய்து வீடியோ கால் அம்சத்தினைப் பயன்படுத்த முடியும்.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

என்க்ரிப்ட்

வாட்ஸ்ஆப் மெசேஜ்களைப் போன்றே வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களும் முழுமையான என்க்ரிப்ஷன் செய்யப்படும் என்பதால் யாராலும் தகவல்களைப் பார்க்கவோ, அழைப்புகளைக் கவனிக்கவோ முடியாது.

பயன்பாடு

வாட்ஸ்ஆப் வீடியோ கால் அனைவருக்கும் கிடைக்கும் அம்சமாக இருக்க வேண்டும், பணம் வைத்திருப்பவர்கள் மட்டும் பயன்படுத்தும் அம்சமாக இது இருக்கக் கூடாது என்பதில் வாட்ஸ்ஆப் உறுதியாக இருக்கிறது என்றும் வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது.

ஸ்மார்ட்போன்

அனைத்து வித கருவிகளிலும் வாய்ஸ் மற்றும் வீடியோ கால்கள் சிறப்பாக இயங்க வேண்டும் என்பதில் வாட்ஸ்ஆப் கவனமாக இருக்கிறது என வாட்ஸ்ஆப் நிறுவனர் ஜான் கௌம் தெரிவித்துள்ளார்.

பயனர்கள்

இந்தியாவில் 160 மில்லியன் பயனர்களை வாட்ஸ்ஆப் கொண்டிருக்கிறது. இந்தியாவில் சீரற்ற இண்டர்நெட் இருந்தாலும் சிரமமின்றி வேலை செய்யும் படி வாட்ஸ்ஆப் வீடியோ கால் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
WhatsApp Video Calling available with Optimized India's Connectivity Issues
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்