வாட்ஸ்ஆப் பயனாளிகள் எண்ணிக்கை 800 மில்லியின்

By Meganathan
|

வாட்ஸ்ஆப் செயலியின் மாதாந்திர பயனாளிகளின் எண்ணிக்கை 80 கோடியை கடந்ததாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜான் கௌம் தெரிவித்தார். இதன் எண்ணிக்கை ஜனவரி மாதம் 70 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை பேஸ்புக்கில் தெரிவித்த கௌம் தனது பேஸ்புக் பக்கத்தில் " WhatsApp - now serving 800,000,000 monthly active users. Reminder for the press out there: active and registered users are not the same thing." இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

வாட்ஸ்ஆப் பயனாளிகள் எண்ணிக்கை 800 மில்லியின்

இதன் மூலம் வாட்ஸ்ஆப் அப்ளிகேஷன் உலகளவில் அதிகம் பயனாளிகளை கொண்டிருக்கின்றது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்த படியாக பேஸ்புக் நிறுவனத்தின் மெசஞ்சர் ஆப் 60 கோடி பயனாளிகளையும், இன்ஸ்டாகிராம் அப்ளிகேஷன் 30 கோடி பயனாளிகளையும், டுவிட்டர் தளம் 28.8 கோடி பயனாளிகளை கொண்டிருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்ஆப் அப்ளிகேஷனின் புதிய அப்டேட்டில் வாட்ஸ்ஆப் கான்வர்சேஷன்களை கூகுள் டிரைவில் பேக்கப் செய்ய முடியும். இந்த அம்சம் ஆன்டிராய்டு அப்டேட் வெர்ஷன் 2.12.45 கிடைக்கின்றது. இந்த வெர்ஷனை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

Best Mobiles in India

English summary
WhatsApp CEO Jan Koum has revealed that the mobile-based messaging service now has 800 million monthly active users, up from 700 million in January.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X